Header Ads



ஊடகவியலாளர் ஏ.எஸ். புல்கிக்கு உதவுவோம்..!

புத்தளத்தின் மூத்த ஊடகவியலாளரான ஏ.எஸ்.புல்கி கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்று படுக்கையில் உள்ளார். புத்தளம் மற்றும் குருநாகல் வைத்தி யசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த புல்கி சிகிச்சையின் பின்னர் வீட்டில் உள்ள போதும் அவர் இன்னமும் பூரண சுகமடையவில்லை.

இந்நிலையில் அவரைப் பரிசோதித்த சத்திர சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என சிபார்சு செய்துள்ளதோடு அதற்கான திகதியையும் அறிவித்துள்ளனர்.

கடந்த சில காலமாக தொழில் இன்றி இருக்கும் அவர் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார். தற்போது தினமும் மருத்துவ மற்றும் ஏனைய செலவுகளுக்காக அதிகளவு பணம் தேவைப்படுவதாகவும் அச்செலவுகளைச் சமாளிப்பதற்கு தான் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்தார். எனவே பெருமனம் கொண்டவர்கள் இவ்விடயத்தைக் கருத்திற்கொண்டு முடியுமான உதவிகளைச் செய்து தருமாறு அவர் வேண்டிக் கொண்டார்.

எனவே, மூத்த ஊடகவியலாளரான புல்கிக்கு தனவந்தர்கள் தங்களாலான பொருளாதார உதவிகளைச் செய்து அவருக்கு உதுவுமாறும் அவர் விரைவில் குணமடையவும், மீண்டும் பழைய நிலைக்கு மீளவும் பிரார்த்திக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

இவருக்கு உதவ விரும்புவோர் புத்தளம் அமானா வங்கியின் ஏ.எஸ். புல்கி 0110161178001 என்ற கணக்கிற்கோ, புத்தளம் செலான் வங்கியின் ஏ.எஸ். புல்கி 049002016885101 என்ற கணக்கிற்கோ உதவிகளை அனுப்ப முடியும்.

No comments

Powered by Blogger.