குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சித்தால், இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் - ஹெல உறுமய
.jpg)
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
கள்வர்கள், ஊழல் பேர்வழிகள் மற்றும் கொலையாளிகளை பாதுகாக்க கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கமும் முயற்சித்தால் அரசாங்கத்தை விட்டு வெளியேற நேரிடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை பின்பற்றி செயற்பட்டால், நூறு நாள் திட்டம் அமுல்படுத்தப்படும் முன்னதாகவே நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேற நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அண்மைய நாட்களில் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோர் கொலையாளிகளை பாதுகாக்க தமது கட்சி எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முடிந்தளவு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனையை இந்த அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நாங்களும் அதையேதான் விரும்புகின்றோம் சாமி!
ReplyDeleteஆனாலும் ஒரே ஒரு சந்தேகம் சாமி:
ஏறக்குறைய எல்லோருமே கள்வர்களாக, கொள்ளையர்களாக, கொலைஞர்களாக இருக்கும்போது அல்லது அந்த திருட்டிலும் கொள்ளையிலும் கொலைகளிலும் குறைந்தபட்சம் பங்குதாரர்களாக இருக்கும்போது..
எப்படி சாமி உங்களால் இத்தனை விறைப்பாக கண்டிஷனெல்லாம் போட முடிகின்றது..?