சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவியுள்ளமை, வேதனையளிக்கின்றது - ஞானசாரா
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடையவில்லை.
சிங்கள பௌத்தர்களே தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்த தோல்வி வேதனையளிக்கின்றது. கூடிய காலம் செல்லும் முன் மக்களுக்கு இந்த உண்மை புலப்படும்.
ஏனைய இன சமூகங்கள் தங்களது இனம் பற்றி சிந்தித்து செயற்பட்ட போது, சிங்கள பௌத்தர்கள் இனம் பற்றி கரிசனை காட்டவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோற்றாலும் பௌத்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையை பொதுபல சேனா தொடர்ந்தும் ஆற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை இனம் தங்களை பற்றி சிந்திக்க தூண்டிய காரண கர்த்தாவே நீகங்கள் தான் சாது. அதற்கு எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு.
ReplyDeleteadappaawi nee innum irukkuriya , iri waaran da,,,
ReplyDeleteகீழே விழுந்தாலும் மண்டல மன் ஒட்டல்ல துல்லிய மாடு பொதி சுமக்கும் இவன் பொதி சுமக்க போவது வெகு தூரத்திலில்லை...!
ReplyDeletewhen this criminal to be put in Jail? the new Government will provide justies under good governace.
ReplyDeleteஜனாதிபதி மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப அல்லாஹ் 2 வருடங்களுக்கு முன்னால் போட்ட திட்டம் தான் நீ இந்த விளையாட்டை விளையாட வேண்டும் என வைத்தது. முஸ்லிம்கள் சார்பில் உனக்கு எமது கோடி கோடி நன்றிகள். மகிந்தவை வீட்டுக்கு அனுப்பிய ஒரே சூத்திரதாரி நீ தான் என்பதை நாம் ஒரு போதும் மறக்கமாட்டோம் அஞ்ஞான சாரரே.
ReplyDelete