Header Ads



மைத்திரிக்கு கௌரவம் - இலங்கை வருகிறார் நரேந்திர மோடி


எதிர்வரும் மார்ச் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வருகைத் தருவார் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

சற்றுமுன்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும், இந்திய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்ற வேளையிலேயே இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பாக பேசப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் இச்சந்திப்பில் மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர் விவகாரம் என பல விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் மங்கள சமரவீர இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜித் டோவாலையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

No comments

Powered by Blogger.