கட்சிகளிலிருந்து பல்டி அடிக்கமுடியாது, இரட்டைப் பிரஜா உரிமையுள்ளவர் தேர்தலில் போட்டியிட தடை
கட்சித் தாவல்களை மேற்கொள்ளும் உறுப்பினர்களின் பதவிகளை ரத்துச் செய்வதற்கான புதிய சட்ட திட்டங்களை வரைவதற்கு தேசிய நிறைவேற்றுச் சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
இரட்டைப் பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு தேசிய, பிரதேச தேர்தல்களில் போட்டியிட முடியாதெனக் கூறும் சட்டங்களைக் கொண்டு வருவதும் தொடர்பாகவும் ஆராயப்பட்டு ள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
இந்த நிறைவேற்றுச் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாதுலுவாவே சோபித தேரர், பாட்டலி சம்பிக்க ரணவக்க, அநுர குமார திசாநாயக்க. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரவூப் ஹக்கீம், ஆர். சம்பந்தன். சரத் பொன்சேகா, மனோ கணேசன். ரிசாட் பதியுதீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாளை 20 ஆம் திகதி இச்சபை ஜனாதிபதி செயலகத்தில் மீண்டும் கூட உள்ளது.
.jpg)
கட்சி தாவல் செய்பவர்களது பதவியை ரத்து செய்வது மிகவும் முக்கியமான நல்ல விடயம் ( இனி ஹக்கீம் அவர்கள் சேதாரம் இல்லாமல் என்ற கதை அளக்க முடியாது. பதவிகளுக்காக அலையும் எம்பி மாருக்கு ஆப்புதான் விசேடமாக முஸ்லிம் காங்கிரஸ் , ஆனால் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது என கூறுவது ஏற்புடையதாக தெரியவில்லை. ராஜபக்ச அன் கோ களை கருத்தில் கொண்டு சிந்திக்காமல் நிறைய புத்தி ஜீவிகள் தங்களது பிறந்த நாட்டுக்காக அரசியல் மூலம் நல்லது செய்ய விரும்பினாலோ அல்லது நாட்டுக்கு அவர்கள் தேவைபட்டாலோ இப்படியான சட்டமூலம் நாட்டுக்கு பாதகமாக முடியலாம். இது மிகவும் ஒரு பிற்போக்கான சிந்தனையும் முயற்சியுமாகும்.
ReplyDelete