ரணிலின் எச்சரிக்கை
நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தெரிவின் போது கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தொடர்பில், மீள்பரிசீலனை செய்யப்படும் என்று அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது கட்சி எடுத்த தீர்மானத்துக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் தமது இணக்கத்தை வெளியிட்டனர். எனினும் சிலர் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டனர்.
இந்தநிலையில் அவர்களை போட்டியிட வைப்பது தொடர்பில் மீள் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி பாரிய அர்ப்பணிப்புக்களை செய்தது.
இதன்மூலம் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரலுக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment