Header Ads



அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று இலவசமாக பயணிக்கலாம்

இரு அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் எவ்விதமான கட்டணங்களும் செலுத்தாது இலவசமாக பயணிக்கலாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் கொழும்பு - கட்டுநாயக்க மற்றும் கோட்டே - காலி ஆகிய இரண்டு அதிவேகப்பாதைகளிலும் இன்று எதுவித கட்டணங்களுமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதனால் வாக்காளர்களுக்கு வசதி, வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.