Header Ads



அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவராக சிப்லி பாறூக் - றிசாத் பதியுதீன் தெரிவிப்பு

-டீன் பைரோஸ்-

இந்த நாட்டல் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என நாம் முடிவு செய்த போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமைத்துவம் எடுத்த தீர்மானத்தை ஏற்று கடந்த ஜனாபதி தேர்தலின் போது பல தியாகங்களுக்கு மத்தியில் எம்முடன் இணைந்து செயல்பட்ட பொறியியலாளர் சிப்லி பாறூக் இன் காத்திரமான செயல்பாடுகளை பாராட்டுவதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இன்சா அழ்ழாஹ் எதிர்காலத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ; பிரதி தலைவராக இருந்து பொறியியலாளர் சிபி;லி பாறூக் செயல்படுவார் என நடை பெற்ற மக்கள் சந்திப்பின் போது இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை காத்தான்குடி மக்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

கிpழக்கு மாகாண சபை உறுப்பினர் போறியியலாளர் சிப்லி பாறூக் இன் ஏற்பாட்டினில் (30.01.2015 வெள்ளிக்கிழமை) காத்தான்குடி கடற்கரை ஆவன்னா மாவன்னா ஹாஜியார் வளவினில் ஏறு;பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பும் இராப்போசன நிகழ்வும் அதிகமானவர்களின் பங்கு பற்றுதலுடன் மிக சிறப்பாக இடம் பெற்றதனை காணக் கூடியதாக இருந்தது.

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமமைச்சர் றிசாத் பதியுதீன்,பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் ஓட்டமாவடி நகர முதல்வர் வை.எஸ்.எஸ்.ஹமீட் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதியுயர் பீட உறுப்பினர்கள், கல்வி மான்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்,பொதுமக்கள் என சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

மேலும் அங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,

எமது தாய்மார்களில் அதிகமானவர்கள் நோன்பு நோற்று அல்லாவிடம் பிரார்தித்து இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

புதிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதால் நாம் எமது மக்களுக்கு அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவு செய்வோம் எனவும் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பொது முன்னால் அமைச்சர் ஹிஸ்புல்லா கடைசி வரையும் எம்மோடு இனையாதது பற்றி நான் மக்கமா நகர் சென்ற போது எமது நாட்டை சேர்ந்த பல சகோதரர்கள் என்னிடம் கேட்டனர் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

1 comment:

  1. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    எமது தாய்மார்களில் அதிகமானவர்கள் நோன்பு நோற்று, இறைவனிடம் பிரார்த்தனை செய்து இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் .இதற்கான காரணம் இந்த நாட்டில் இஸ்லாத்துக்கும், இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கும் ஏற்பட்ட சவால்.
    எனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்நாட்டில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் ,இஸ்லாமிய கலாசார வளர்ச்சிக்கும் ஒன்று பட்டு உழைப்பதில் தான் உண்மையான வெற்றி தங்கியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.