மேல் மாகாணத்துக்கு பொறுப்பாக பூஜித ஜெயசுந்தர
இலங்கையின் பொலிஸ் அதிகாரிகள் 6 பேர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சின் செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி மேல்மாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ் அதிபர் அநுர சேனாநாயக்கää கொழும்பு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வடமாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ் அதிபர் பூஜித் ஜெயசுந்தர மேல்மாகாணத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ் அதிபர் லலித் ஜெயசிங்க வடமாகாணத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண உதவி பொலிஸ் அதிபர் நந்தன முனசிங்க ஊவாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தென்மாகாண உதவி பொலிஸ் அதிபர் சி டி விக்கிரமரத்ன சப்ரகமுவவுக்கு மாற்றம் பெற்றுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தின் உதவி பொலிஸ் அதிபர் ரவி வித்தியாலங்கார பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றம் பெற்றுள்ளார்.

Post a Comment