மைத்ரியின் வெற்றிக்கு காரணம், சிறுபான்மையினர் மட்டும்தான் என்ற தொனியில் உள்ள ஆபத்து
மைத்ரியின் வெற்றிக்கு காரணம் சிறுபான்மையினர் மட்டும்தான் என்ற தொனியில் அநேகமானோர் சமூக வலைதளங்களில் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் உண்மை இருக்குதோ இல்லையோ ஆனால் எங்களின் இது போன்ற கருத்துக்கள் தற்போது அதிகமான பெரும்பான்மை இன மக்களிடையேயும் ஒரு கசப்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளது ..!!
அண்மையில் சம்பிக்க ரணவக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் அது தொடர்பாக பேசி இருந்தார்.. அவர் கூறுகையில் "மைத்ரி இன் வெற்றியில் 88 வீதமான பங்களிப்பு சிங்கள மக்களிடம் இருந்தே கிடைக்கபெற்றது என்பதை சிறுபான்மை இன மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்" என பேசியிருந்தார்...
எது எவ்வாறாக இருந்தாலும் இது ஒரு சிங்கள பௌத்த நாடு..
நாம் சற்று அமைதியாக அடக்கி வாசிப்பதே எதிர்கால சமாதான நடவடிக்கைகளுக்கு நலவாக இருக்கும் என நம்புகின்றேன்.
சில கசப்பான வருடங்களின் பிற்பாடு இன்று அனைத்து இன மக்களோடும் இன ஐக்கியத்தோடு வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள இந்த அழகான தருவாயில் பிரிவினை மற்றும் இனவாத பேச்சுக்களை தவிர்த்து சமூக வலைத்தளங்களில் எமது கருத்துக்களை பதிவு செய்வது சிறப்பாக இருக்கும்..!!
எனவே தற்போதைய அரசாங்கதிற்கு சிறுபான்மை மக்கள் பற்றி இருக்கக்கூடிய நல்லெண்ணத்தை பாதிக்கும் வண்ணம் அதுபோன்ற சிங்கள மக்களை தூண்டக்கூடிய பேச்சுக்களை பேசி அவர்களையும் "தெரிந்த பிசாசின்" அரசாங்கத்தை போன்று சிறுபான்மைக்கு எதிராக செயல்படும் அரசாங்கமாக மாற்றிவிடாமல் பார்த்துக்கொள்வது எம் அனைவரினதும் இன்றைய பொறுப்பாகும்..
S.A.Satham.
.jpg)
இதில் எமது பங்களிப்பும் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளலாம் எம்மால்தான் மட்டுமே இவர் வெற்றி பெற்றார் என்று மூடதனம்.
ReplyDeleteமுஸ்லிம்களே! அல்லாஹ் எமக்களித்த வெற்றியை மறந்து, மாற்று மதமக்களின் உணர்வுகளைக் கிள்ளி, பிரச்சினைகளை உருவாக்குவதைத் தவிர்க்கவும். வெற்றிக்குக் காரணம் முஸ்லிம்களும், தமிழர்களும் மாத்திரமே என்ற கருத்தைவிட இனவாதத்துக்கு எதிராக மூவின மக்களும் சேர்ந்ததால் கிடைத்த வெற்றி என்று கூறுவதே சரியானதும், முறையானதுமாகும். அடுத்த தேர்தல் ஒன்று எம்மை எதிர் நோக்க உள்ளதை நாம் மறந்து விடக்கூடாது. மிக நிதானம் அவசியம்.
ReplyDeleteWELL SAYS..
ReplyDeleteமதத்தினால் இம்சிக்கப்பட்ட மக்களின் வெற்றி. மனதாலும் உடலாலும் நோவினைக்கு உள்ளான மக்களின் வெற்றி, இனவாதத்தை வெறுத்த மக்களின் வெற்றி. எல்லோரும் கொண்டாடுவோம்.
ReplyDeletewe should be patient and should be mindful of the majority.
ReplyDelete