Header Ads



அடுத்த தேர்தலில், நாம் வெற்றி பெற்றுத்தான் ஆக வேண்டும் - ரணில் விக்கிரமசிங்க

-JM.Hafeez-

'கெசினோ' சூதாட்ட ஜாம்பவான்கள் எவரையும் நாட்டில் வைத்திருக்கும் உத்தேசம் எமக்கில்லை. அவுஸ்திரேலியாவின் பிரபல கெசினோ மன்னன் ஜேம்ஸ் பெக்கர் இலங்கைக்கு வரமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை நாம் அழைக்கவுமில்லை... என பிரதமர் ரனில் விக்கரமசிங்கா கண்டியில் வைத்துத் தெரிவித்தார்.(31.1.2015)

கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டப் பாராளு மன்ற அங்கத்தவரும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களால் இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது-

இலங்கையில் கடந்தகாலங்களில் பேசப்பட்ட பிரபல வெளிநாட்டு கெசினோ சூதாட்ட முதலீட்டுக்காரர்கள் மூவரையும் நாட்டில் வைத்திருக்கும் நோக்கம் எமக்கில்லை. அப்படியானவர்களது முதலீடு எமது நாட்டிற்குத் தேவையில்லை. அதில் ஒருவர்தான் ஜேம்ஸ் பெக்கர். அவர் இலங்கைக்கு முதலிட வரமாட்டாராம். அவருக்கு நாம் அழைப்பு விடுக்கவும் இல்லை. அவரது முதலீடு எமக்குத் தேவையுமில்லை.

எமது நாட்டில் நடந்த ஒரு அதிசயத்தைக் கூறவேண்டும். எமது ஜனாதிபதி மைந்திரிப்பால சிரிசேனா அவர்கள் கடந்த 9ம் திகதி பதில் பிரதம நீதியரசர் ஸ்ரீபவான் முன் சத்தியப் பிரமாணம் செய்தார். இது நடந்து ஒரு மாதம் ஆகவி;ல்லை. அதே ஸ்ரீபவான் தன்னால் சத்தியப் பிரமாணம் செய்து வைத்த அதே ஜனாதிபதி  முன்னிலையில் போய் பிரதம நீதியரசராக தான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதிலிருந்து எமது நாட்டின் சட்ட வலிமையை புரிந்து கொள்ளுங்கள். எமது நாடு அழுக்குப் படிந்திருந்தது. தற்போது  அசுத்தங்களை கழுவி எமது நாட்டை சுத்தப் படுத்தி வருகின்றனர். நாடு சுத்தமாக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் தேவையாக உள்ளது.

கம்பளையானும் ரைகமையானும் பயனம் சென்ற சிங்களக்கதை பலருக்குத் தெரியும். கடைசியில் இருவரையும் தேடிய கதையும் தெரியும். இதே கதை கடந்த மாதம் எமது நாட்டிலும் நடந்தது. பிரதமரின் கம்பளைத் தொகுதியை வெற்றி பெறச் செய்ய ரைகமவில் இருந்த வந்தவர் கட்சி மாறி புரட்சி செய்தார். கடைசியில் இருவரையும் தேடவேண்டிவந்தள்ளது.

முன்னைய ஜனாதிபதிக்கு நான்கு போலித் தெய்வங்களது (சத்தர தெவி) பொருளதார ஆசி இருந்தது. அதன்காரமாக அவர் 'சத்தர தெவி பிகிடய்' என்று அவர்களது உதவியை நம்பி இருந்து கடைசியில் அவரும் மாயமாகி விட்டார்.
ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளு மன்றத்தை கலைக்க உத்தேசித்துள்ளோம். அதன் பின் நாம் தனித்திக்கட்சியாகவே போட்டிடுவோம். இப்போது உள்ள நிலை அதன் பின் இருக்காது. ஏனெனில் பொது மக்கள் எமக்கு பூரண ஆதரவை வழங்கி எம்மை வெற்றி பெறச்செய்வர். அதன் பின் நாம் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு முற்படுவோம்.

நாட்டு மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. அதில் முக்கியமானது தத்தமது வயிற்றைப் பார்ப்பது. குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து மக்களதும் வயிற்றில் அடிக்கப்பட்டது. ராஜபக்ச அரசர்கள்கள் தமது பட்டாளத்தை வைத்து பத்து வருடங்களாக அனைத்து துறைகளிலும் வரி அரவிட்டனர். ஒருவர் அவசர தேவைக்கு தொலைபேசிக்கு 'ரீலோட்' போடச் சென்றாலும் 25 சதவீதம் வரி செலுத்த வேண்டும். குழந்தைகளின் பால் மாவிற்கு வரி வித்தனர். பொதுமக்களது வரியில் அவர்கள் சுக போகம் கண்டனர்.

நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் சகாயமும் நிவாரணமும் வழங்கியுள்ளளோம். ராஜபக்ச அரசு வரியைக் கூட்டித்தான் நிவாரணம் என்ற பெயரில் சுமையை வழங்கியது. சுவர்ணபூமி திட்டத்தில் வழங்கப்பட்ட காணி உறுதிகளைப் பறித்து அக்காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்றனர். இலங்கை பாற்சபைக்குச் சொந்தமான (மில்க்போட்) கொழும்பில் உள்ள 15 ஏக்கர் காணியை அவ்வாறு வழங்கி உள்ளனர். அதனை நாம் மீள எடுப்போம்.

நாட்டு மக்களுக்கு சமசந்தர்ப்பம் வழங்கி அதில் எவராது வெற்றி பெற்றால் அவனைப் பாராட்டத்தான் வேண்டும். அந்த அடிப்படையில் நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் சம சந்தர்ப்பம் வழங்கி எவராவது அதன் மூலம் ஜே.ஆர்.ஜயவர்தனா கொண்டுவந்த திறந்த பொருளதாதாரத்தின் நன்மையை அடைந்து கோடிஸ்வரர் ஆக மாறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் தேவையற்ற வரியை விதித்து குறிப்பிடட சிலருக்கு மட்டும் சலுகை வழங்கி ஒரு சிலரை மட்டும் கோடிஸ்வரனாக்கும் செயல் பொருத்தமற்றது. அவ்வாறு ஊழல் புரிந்து செல்வந்தராக மாறியுள்ளவர்கள் தொடர்பாக முறையான விசாரணை நடத்துவோம்.

வரி விதிப்பு முறைகள் திறந்த பொருளாதாரத்தில் காணப் படும் ஒரு பண்புதான். ஆதற்காக அதனை சதா மேற்கொள்ள முடியாது. இதனால்தான் நாம் ஒருமுறை மட்டும் வரி என்ற ஒரு கோட்பாட்டை இம்முறை பின்பற்றினோம். அதன் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் மூன்று வழிகளில் சென்றடைகிறது. அதில் ஒன்றாக  13 பொருட்களின் விலை குறைப்பு, எண்ணெய்விலைகுறைப்பு மூலம் போக்புகுவரத்துச் செலவு குறைந்து அதனால் பொருட்களின் விலை குறைவது, போன்ற அம்சங்களைக் கூறலாம்.

அடுத்து இரண்டாவது விடயமாக இரண்டு இலட்ச ரூபாவரை கடன் பட்டவர்களுக்கு வட்டியிலிருந்து விடுதலை அளித்துள்ளோம். இதனால் வட்டியினால் வரும் சுமை குறைவதுடன் அடிப்படை கடன் பெறுமதி பாதுகாக்கப் படுகிறது. இது ஒருவகையான சகாயமாகும்.
அடுத்து பண வருவாய் அதிகரிப்பைக் குறிப்பிடலாம். அரச ஊழியர், ஓய்வூதியக்காரர், தனியார் துறை முதலானோருக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு மற்றும் திரவப் பாலுக்கான உத்தரவாத விலை அதிகரிப்பு முதலானவற்றகை;குறிப்பிடலாம்.

ஏன் அரிசி விலை குறைக்கவில்லை எனச் சிலர் கேட்கின்றனர். அரிசி விலையைக் குறைத்தால் விசசாயிகள் பாதிக்கப்படுவர். இதனால் கிராமியப் பொருளாதாரம் பாதிக்கும். கிராமப் பொருளாதாரம் பாதித்தால் நகரப் பொருளாதாரமும் பாதிப்படையும். நகரத்தில் உற்பத்தி செய்யும் எந்தப் பொருளையும் வாங்க கிராம மக்ககள் பின்னடைவர். எனவே அரிசிவிலையை அதன் காரணமாகவே குறைக்கவில்லை.

எமது 13 பொருட்களின் விலை குறைப்பு காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என தப்புக்கணக்குப் போடவேண்டாம். ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்குகின்றோம். அதனையும் வெற்றியடையச் செய்ய வேண்டும். சுகாதார, கல்வி, வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை இப்படியான பல பிரச்சினைகள் உண்டு. அவற்றைத் தீர்க்க ஒரு உந்து சக்தி தேவை. அதற்கான ஒட்சிசனை ஏற்றும் ஒரு செயலாகவே இதனைக் கருத வேண்டும்.

கடந்த காலங்களில் எமது நாடு பெற்றுள்ள கடனைப் பற்றிக் கூறினாள் மயக்கம் போட்டு விடுவீர்கள். இங்குள்ள ஒவ்வnhருவரும் எத்தனை இலட்சததிற்கு மேல் கடனாளி எனக் கூறவேண்டிவரும்.  நாம் எமது அமைச்சுக்களில் உள்ள பெட்டிகளையும் அலுமாரிகளையும்  பயந்து கொண்டுதான் திறக்கின்றோம். ஜனாதிபதி காரியாலயத்தில் மட்டும் 500 ற்கு மேற்பட்ட கடன் கோவைகள் (பைல்கள்) மாயமாகியுள்ளன. 

உங்களது குழந்தைகள் நல்ல முறையில் வளர வேண்டுமானால் அடுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றுத்தான் ஆக வேண்டும். அதற்காக உங்கள் குழந்தைகளை நாம் தூக்கிப் பார்க்கமாட்டோம். குழந்தைகளை தூக்கி நிறையைப் பாhத்து தேவையான விடயங்களை வழங்க வேறு ஒரு அமைச்சு உண்டு. அவர்கள் அதனைச் செய்வார்கள். பால்மா விலையைக் கூட்டி உங்கள் குழந்தைகளின் போசாக்கிற்கு குந்தகம் உண்டாக்க மாட்டோம். பெப்ரவரி மாதம் முடியும் முன் புதிய தேர்தல் முறை பற்றி நாம் அறிவிப்போம் என்றார்.

1 comment:

  1. பிரதமர் அவர்களே,

    உங்களிடம் பிடித்த விடயமே இதுதான் ஐயா!

    நமது முன்னாள் பெரியவர் பொதுக்கூட்டங்களுக்கு வருகை தரும்போது அவரது உதவியாளர்கள் தாயுடன் குழந்தையை முன்கூட்டியே ஏற்பாடு செய்து தயார் படுத்தி வைத்திருப்பார்கள்.
    அவரும் வரும் வழியில் குழந்தைகளைத் தூக்கிப் பார்த்து கொஞ்சி விட்டுக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    அதைக் காணும் சாதாரண மக்கள் புளகாங்கிதம் அடைந்து குழந்தைகள் மீது முன்னாள் ஜனாதிபதிக்கு இருக்கும் 'அதீத பாசத்தை'ப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொள்வார்கள்.
    ஆனால், அதே குழந்தையின் முக்கிய உணவான பால்மாவுக்கு அதிகவரி விதித்துத்தான் தன்னுடைய குடும்பத்தினர் லம்போகினி கார்களையும் சொகுசு மாளிகைகளையும் அனுபவிக்க வழிசமைத்தார் என்பதை அந்தக்குழந்தையோ அல்லது அதன் ஏழைத்தாயோ குடும்பமோ அறிந்திருக்கவில்லை.

    இப்படித்தான் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சவாரி செய்து நாட்டையும் பொருளாதாரத்தையும் குட்டிச்சுவராக்கினார் அவர்.

    பிரதமர் அவர்களே,

    இவ்வளவு பெரிய விடயத்தை எவ்வளவு எளிமையாகவும் நகைச்சுவையாகவும் கூறிவிட்டீர்கள்?

    இருந்தாலும் உங்களுக்கு 'லொள்ளு' அதிகம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.