யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் மஹிந்த ராஜபக்ஸ ஆதரவு கூட்டம் (படங்கள் இணைப்பு)
(பாறுக் சிகான்)
இலங்கையில் தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து இன்று மாலை 4 மணியளவில் யாழ் ஐந்து சந்திப்பகுதியில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்விற்கு முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினரும் மக்கள் பணிமனை தலைவருமான பி.எஸ்.எம் சுபியான் மௌலவி தலைமை தாங்கியதுடன் அதிகளவான மக்களும் கலந்து கொண்டனர்.இதன் போது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் அமைச்சருமான கே.என் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் யாழ் மாநகர சபை எதிர்கட்சி தலைவரும் சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Ya Sufiyanu:
ReplyDeleteKaifa yumkinuka an ayyatha ilaa Mahindha? How come it is possible for you to support Mahindha?