Header Ads



பிரான்ஸின் நையாண்டி பத்திரிகையை கண்டித்து பாகிஸ்தான், நைஜீரியா நாடுகளில் போராட்டம்

பிரான்சு தலைநகர் பாரீசில் சார்லிஹெப்டோ பத்திரிகை அலுவலகத்துக்கள் புகுந்து ஆயுததாரிகள், துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 12 பேர் உயிரிழந்தனர். சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்டதால் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தாக்குதல் நடந்து ஒருவாரம் கழிந்த பின்னரும் அப்பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்டது. இதனால் நைஜீரியா, பாகிஸ்தான், அல்ஜீரியா, சூடான் உள்ளிட்ட நாடுகளில் பதட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

நைஜீரியாவின் 2–வது பெரிய நகரமான ஷிண்டரில் பிரெஞ்சு பத்திரிகையான சார்லி ஹெப்டோவை கண்டித்து போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் திரண்டனர். அப்போது பத்திரிகைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரான்ஸ் கலாச்சார மையங்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர். தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.

இச்சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். 50–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் முன்பு நேற்று போராட்டம் நடந்தது. இதில் 200–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.

இதற்கிடையே இப்போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. பிரெஞ்சு தூதரகம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். எனவே போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

மேலும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் கூட்டத்தினர் சிதறுண்டு ஓடினர்.

1 comment:

  1. why do Saudi and other countries didn't take take it as a serious insult to Islam?

    ReplyDelete

Powered by Blogger.