'கிழக்கு மாகாண ஆட்சி' தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் இழுபறி
-மு.இ.உமர் அலி-
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பும் ஐக்கியதேசியக்கட்சியும் இணைந்து செயல்பட இருப்பது அனைவரும் அறிந்த விடையமே. அது சம்பந்தமாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை கொழும்பில் நடைபெற்றன.
இப்பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு முதலமைச்சருடன் இரண்டு அமைச்சுக்கள் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இதற்கு முஸ்லீம் காங்கிரஸ் இணங்கவில்லை, மாகாண முதலமைச்சருடன் எஞ்சிய நான்கில் இரண்டு அமைச்சுக்களை கூட்டமைப்புக்கு வழங்குமிடத்து, மீதமாகும் இரண்டு அமைச்சுப்பதவியில் இரண்டினை ஐக்கிய தேசியக்கட்சியும்,முஸ்லீம் காங்கிரசும் தலா ஒன்று வீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஹக்கீம் தரப்பினர் முதலமைச்சுடன் தமக்கு ஒரு அமைச்சுப் பதவியினை கோரி நிற்பதுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு இரண்டு அமைச்சுப்பதவிகளை வழங்க சம்மதித்துள்ளனர். ஆனால் இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இணங்கியதாக தெரியவில்லை, இழுபறியில் நடைபெற்ற சந்திப்பு எதுவித தீர்வும் எட்டப்படாமலேயே முடிவடைந்தது.
சில வேளை தற்போது ஆட்சியிலிருக்கும் மாகாணசபை அங்கத்தவர்கள் இணக்கப்பாடொன்றுக்கு வருமிடத்து தமக்குள்ளே பதவிகளை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கின்றது.
இல்லாவிடின் மாகாணசபை கலைக்கப்பட்டு புதிய சபை ஒன்றினை தெரிவதற்கான கோரிக்கை அரசிற்கு முன்வைக்கப்படலாம். ஹகீம் தரப்பினர் தாமாக தற்போதைய மாகாண சபைக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் வாங்கும்போது அந்த நிலை உருவாகலாம்.
எது எப்படி இருந்திட்டபோதிலும் அரசு தற்போதைக்கு கிழக்கு மாகாண சபை பற்றி எதுவித விசேட கவனமும் செலுத்த தயாராயில்லை,ஏனெனில் எதிர்வரும் நூறு நாட்கள் திட்டத்தினை வெற்றிகரமாக முடிப்பதற்கும்,அதன் பின்னர் வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி பாராளுமன்ற ஆட்சியினை கைப்பாற்றவுமே ரணில் தரப்பினர்.மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
முப்பத்தியாறு மாகாணசபை ஆசனங்களில் ,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 அங்கத்தவர்களையும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு 11 ஆசனங்களையும்,சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றது, அத்தோடு ஐக்கியதேசியக்கட்சி நன்கு ஆசனங்களையும்,தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தையும் வைத்திருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment