Header Ads



''சக முஸ்லிமுக்கு குழிவெட்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்'' பதில் கட்டுரைகள் 2

ஒரு முஸ்லிமுடைய இரத்தம், பொருள், மானம், மரியாதை ஆகிய அனைத்தும் பிற முஸ்லிமின் மீது ஹாராமாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்:முஸ்லிம்.

தன் சகோதர முஸ்லிமுடைய மானமரியாதையை யார் காப்பாற்றுகின்றாரோ மறுமையில் அவருடைய முகத்தை அல்லாஹ் நரகிலிருந்து காப்பாற்றுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி)நூல்: அஹ்மத், திர்மிதி

அண்மையில் ஷேக் ஷபீக் என்ற பெயர் உடைய ஒருவர் உங்களுடைய முக நூலில் மிகவும் கேவலமாக எங்கள் அமைச்சரை விமரிசித்திருந்தார். அவருக்கு எங்கள் பாராளுமன்ற அங்கத்தவர் மீது என் இந்த வெறித்தனமான ஒரு வெறுப்போ எனக்கு தெரியாது. எங்கள் MP அக்குரணை மற்றும் ஏனைய பகுதி மக்களால் வெறுக்கப்படுகிறார் என்றும் தாறுமாறாக விமரிசிக்கப்படுகிறார் என்று பதியும் இவர் எங்கள் MP அரசியலில் அடி வைத்த பின் இன்று காலம் வரை எப்படி வெற்றி மேல் வெற்றி அடைந்து வருகிறார் என்று பதிவு செய்ய வில்லை. ஜனாப் ACS ஹமீது அவர்களுடன் எங்கள் MPயை ஒப்பிட்டு விமரிசிக்கும் இவர் காலம் சென்ற அமைச்சரின் ஒரு சிஷ்யனாகவும் அவருடன் கூடவே பணியாற்றிய அனுபவம் இருக்கும் எங்கள் தற்போதைய அமைச்சரை இன்னுமொரு ஹமீது ஆக எங்களை  எதிர்பார்க்க சொல்கிறார். இதை பொது அறிவு உள்ள எங்களுக்கு எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. இதில நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் அக்குரணை, கண்டி போன்ற பகுதிகளை வாழும் மக்களுக்கு அவருக்கு வாக்களித்து ஒவ்வொரு முறையும் தெரிவு செய்து வரும் மக்களுக்கு ஹலீம் என்று ஒரு MP இருப்பதாகவே தெரியாதாம். இவர் இப்படி சொல்லி இப்பகுதி மக்களையும் எதனோடு ஒப்புடுகிறார்?

அடுத்த முறை எனக்குள் MPக்கு பாடம் படிப்பிக்க வேண்டும்  என்று சொல்லும் இவருக்கு தெரியாமல் இருக்கலாம், எத்தனையோ பேர் இந்த நோக்கில் இவரைப்போல் முயற்சி செய்து அல்லாஹ்வின் உதவியும் மக்களின் ஆதரவும் உள்ள எங்கள் MPக்கு பாடம் புகட்ட முனைந்து மூக்கு உடைபட்டிருக்கிரார்கள் என்று. அடுத்த விடயம் என்னவென்றால் எங்கள் MP கண்டி மாவில்மடையில் குடியிருப்பதும் இவருக்கு ஒரு பிரச்சினையாக தெரிகிறது. கண்டி மாவட்டத்தின் GEOGRAPHY ஐ தெரிந்து கொண்டு தான் இதை எழுதினாரோ அல்லது இவரை தூண்டி விட்டவர்கள் சரியான இடங்களை பற்றி இவருக்கு தெளிவு படுத்தவில்லையோ தெரியவில்லை. மேலும் கண்டி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் ஆதரவும் மற்றும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் உள்ள சிங்கள சகோதரர்களின் அமோக ஆதரவை பெற்றிருக்கும் எங்கள் அமைச்சர் எல்லாவித மக்களும் மிகவும் இலகுவாக சந்திக்க முடியுமான ஒரு இடத்தில் தான் தற்போது வசித்து வருகிறார் என்பதை திரித்து சொல்வதை பாருங்கள். எங்கள் அமைச்சர் மற்றவர்கள் போல் தேர்தல் காலத்தில் மட்டும் முகம் காட்ட வரும் அரசியல்வாதி அல்ல அவருடைய வீடும், குருகொடையில் உள்ள தாயார் வீடும் கட்டுகஸ்தோட்டை காரியாலயமும் 24 மணி நேரமும் திறந்தே இருப்பது இவருக்கு தெரியாமல் இருக்கலாம்.

எங்கள் அமைச்சரின் அரசியல் அனுபவத்தில் பல முக்கிய பொறுப்புகளில் முன்னர் சாதித்து இருக்கிறார். வெளிநாட்டு அமைச்சரின் மக்கள் தொடர்பு அலுவலர், அந்தரங்க செயலாளர், மாகான பிரதிநிதி, மாகான அமைச்சர், தற்காலிக முதலைமைச்சர், மேலும் 16 வருடங்களாக பாராளுமன்றத்தில் அரசாங்கத்திலும் எதிர் கட்சியிலும் இருந்து இருக்கின்றார். இப்படி பட்ட ஒருவரை புத்திசாலி கூட்டம் என்று பீற்றிகொள்ளும் சில கூட்டத்தினரினதும் குறிப்பிட்ட சில புதிய செல்வந்த பிரபுக்களின் கொந்தராத்தை ஏற்றுக்கொண்டு சேறு பூசி பிழைக்கும் இந்த மாதிரியானவரின் இந்த செயல்களினால் எங்கள் கண்டி மாவட்ட முஸ்லிம் மக்களும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி மக்களும் துவண்டுவிடப்போவது இல்லை. அல்லாஹ்வின் உதவியால் மேலும் தங்கள் ஆதரவை அமைச்சருக்கு கொடுக்கட்டும் என்ற துவா செய்து கொள்வோமாக.  

2

FACEBOOKஇல் Account வைத்திருக்கும் எங்கள் சமூகத்தில் இருக்கும் சிலர் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் பொறாமை என்ற மனநோய்க்கு வடிகாலாக தனது சொந்த கருத்தை சமூகத்தின் கருத்தாக POST செய்வது இப்போது வழக்கமாக காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாப் ஹலீம் அவர்கள் அரசியலில் நுழைந்தது 1987 என்று நினைக்கிறேன். அப்போதிலிருந்தே அவர் மத்திய மாகான சுகாதார அமைச்சராகவும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சராகவும் பின்னர் ஜனாப் ஹமீது அவர்களின் மறைவுக்குப்பின் ஐ.தே.க வால் சிங்கள முஸ்லிம் மக்கள் வாழும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதிக்கு நியமித்தது. இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்த கட்சி தனது கட்சியின் அமைப்பாளராக தகுதி இல்லாதவரை நியமிக்கும் என்று இதை எழுதியவர் நினைத்தால் இவரின் உள்நோக்கம் மக்களுக்கு புரியும். இலங்கை தேர்தல் முறைப்படி இவர் சொல்வது போல் ஜனாப் ஹலீம் அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையெனில் மக்களால் மூன்று முறை தெரிவு செய்யப்பட்டது எப்படி?அதுவும் முஸ்லிம் கட்சி தலைவரையும் பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்து சாதனை படைத்து இருக்கின்றார் . ஒவ்வொரு முறையும் கண்டி மாவட்டத்தில் இவர் மட்டும் அல்ல பல முஸ்லிம் அபேட்சகர்கள் போட்டி இடுகிறார்கள். மக்கள் வேண்டுமானால் இவரை தெரிவு செய்யாமல் வேறு யாரையேனும் தெரிவு செய்ய சந்தர்பம் உண்டுஎன் அது நடக்கவில்லை. எங்கள் சமூகத்தில் சில புதிய பணம் படைத்த கனவான்கள் தனது பணப்பலத்தை கொண்டு சதி செய்யவும் அரசியலில் நுழைய சந்தர்பத்தை ஏற்படுத்தி கொள்ளவும் இவைகளுக்கு துணை போகும் இதை எழுதிய சகோதரர் போன்றோரும் செய்யும் சூழ்ச்சிகளும் அக்குரணை மக்களும் கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் அறியாததல்ல. இம்முறை இவரின் அயராத முயற்சியால் தந்தி தொகுதியை 21000 அதிகப்படியான வாக்குகளால் வெற்றியீட்டியது ஒரு சாதனை இல்லையாநண்பரே அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் சக முஸ்லிம் சகோதரனுக்கு குழி பறிப்பதை நிருத்திக்கொள்ளுங்கள்.

2 comments:

  1. I do not know personally Mr.Haleem. However, I like to say this:
    Sheigh Shafeeq neither insulted nor demeaned Mr.Haleem to the extent that the author describe here. Shafeeq basically mentioned any post but Muslim cultural Ministry may be suitable for Mr.Haleem, that is it. We don't need to create big issue out of this.But, better avoid personal matters over the net. Give the benefit of the doubt to Shafeeq. Only Allah knows each intention.

    ReplyDelete
  2. சரி நீங்கள் சொல்வதுபோல் உங்கள் எம் பி இருந்தால் எல்லுருக்கும் நல்லதுதான் ஆனால் அவர் அமைச்சு பதவிப் பிரமாணத்துக்கு போகாத காரணம் என்ன கொஞ்சம் கூட சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டார் போலும் அவருக்கு கிடைக்க இருந்தது இந்த சூழ்நிலையில் மிக முக்கியமான அமைச்சு .....

    ReplyDelete

Powered by Blogger.