பாரிசில் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு 51 கோடி பரிசு
(India)
பாரிசில் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ரூ. 51 கோடி பரிசு வழங்க தயார் என்று பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஹாஜி யாகூப் குரேஷி தெரிவித்துள்ளார்.
பாரிசில் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ரூ. 51 கோடி பரிசு வழங்க தயார் என்று பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஹாஜி யாகூப் குரேஷி தெரிவித்துள்ளார்.
2006–ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டென்மார்க் பத்திரிகை ஒன்றில் நபிகள் நாயகம் பற்றிய கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டது. அப்போது மீரட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஹாஜி யாகூப் குரேஷி, பத்திரிக்கையின் கார்டூனிஸ்டை யார் கொலை செய்கிறாரோ அவருக்கு ரூ. 51 கோடி பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். நேற்று பிரான்ஸ் நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை, கடந்த 2006–ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட நபிகள் நாயகம் பற்றிய கேலிச்சித்திரத்தை மறுபிரசுரம் செய்ததால் கடும் எதிர்ப்பை சந்தித்தது.
கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம், மீண்டும் அதுபோன்ற கேலிச்சித்திரத்தை அட்டைப்படமாக வெளியிட்டதையடுத்து, அதன் அலுவலகம் குண்டு வீசி தாக்கப்பட்டது.
கடந்த 2012–ம் ஆண்டு, முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க படத்தை கண்டித்து பல நாடுகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தபோது, மீண்டும் அதே போன்ற கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. பத்திரிகை அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், 12 பேர் பலியானார்கள். அவர்களில், பத்திரிகை ஆசிரியர் ஸ்டெபானி சார்போனியர், கேலிச்சித்திரம் வரைபவர்களான சாபு, டிக்னஸ், வோலின்ஸ்கி ஆகியோரும், இரண்டு போலீசாரும் அடங்குவர். தாக்குதலுக்கு பிறகு, துப்பாக்கியால் சுட்டபடியே தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஹாஜி யாகூப் குரேஷி, அவர்கள் வந்து அறிவித்த பரிசு தொகையை கேட்டால், அதனை கொடுக்க தயாராக இருக்கிறேன். என்று தனியார் செய்தி பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். நபிகள் நாயகதத்தை யாரெல்லாம் அவமரியாதை செய்கிறார்களோ அவர்களும், சார்லி ஹெப்டோ பத்திரிகையின் பத்திரிக்கையாளர்கள் மற்றும் கார்டூனிஸ்ட்கள் போன்று மரணத்திற்கு அழைப்பு விடுப்பவர்களே என்றும் அவர் கூறியுள்ளார்.
நபிகள் நாயகத்தை பின்பற்றுபவர்கள் அவர்களை தண்டித்துள்ளனர். முகமது நபியை அவமரியாதை செய்பவர்கள் மரணத்திற்கு தகுதியானவர்கள், இதில் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எதுவும் தேவையில்லை என்று ஹாஜி யாகூப் குரேஷி கூறியுள்ளார்.

Post a Comment