மஹிந்தவின் 30 எம்.பி.க்கள் மைத்திரியுடன் இணைய விருப்பம், சந்திரிக்காவும் பாராளுமன்றம் வருகை
-அஸ்ரப் ஏ சமத்-
இந்த நாட்டில் இயங்கி வந்த சில வெப்தள செய்திகளை கடந்த கால அரசு தடை விதித்து இடை நிறுத்தியது.
இன்றில் இருந்து சகல வெப்தள செய்திகளையும் மீள இயங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனாதிபதி தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக இன்று ரணில் விக்கிரமசிங்கவின் அழுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இன்று அமைச்சரவைகள் நியமனம் இடம்பெறும். அவற்றில் தொகை 30அதிகரிக்கும் மகிந்தராஜபக்சவுடன் இருக்கும் 30 பாராளுமன்ற உறுப்பிணர்கள் தாமாகவே மைத்திரியின் வேலைத்திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளனர். அதில் நவசமாசமக் கட்சிய வாசுதேவ டி.யு.குணசேகர, பேராசிரியர் திஸ்ச விதாரண ஆகியோறும் ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் மீள பாராளுமன்றம் வருவார். என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக ஜ.தே.கடசியின் தேசிய பட்டடில் பாரளுமன்ற உறுப்பிணர் ஒருவர் விலகி அப் பதவி சந்திரிக்காவுக்கு வழங்குவதற்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என மங்கள சமரவீர தெரிவித்தார்.

Dear sir please the best without considering the corrupt tradition.
ReplyDelete