Header Ads



கல்முனை ஸாஹிரா கல்லூரியிலிருந்து 150 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி


( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து 150 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பொறியியல் துறைக்கு ஏ.எச்.எம்.அஜ்மல் பாயிக் , எச்.ஏ.சதீர் , எம்.ஜே.எம்.நிஸ்பர் ,எம்.எச்.எம்.றிஜாஸ் , ஏ.எச்.எம்.இஸ்பர், எம்.என்.ஏ.நாஸிப்,எம்.என்.எம்.நளீர் ஆகிய 7 மாணவர்கள் பொறியில் துறைக்கும் எம்.ஏ.எச்.ஆகில் ஜாவித் மருத்துவத் துறைக்கும் , கணிதத்துறைக்கு  30 மாணவர்களும் , பல் வைத்தியம் , மிருக வைத்தியம் , உயிரியல் , விவசாயம் , தொழில்நுட்பம் , கட்டடிட நிர்மாணம் , நில அளவை உள்ளிட்ட துறைகளுக்கு 42 மாணவர்களும் , வர்த்தக முகாமைத்துவ துறைக்கு 4 மாணவர்களும் , வர்த்தகத்துறை மற்றும் கலைத்துறைகளுக்கு  66 மாணவர்களும்  பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தெரிவித்தார்

அத்துடன் அரசாங்கம் அறிமுப்படுத்தியுள்ள தொழில் நுட்பத்துறையில் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப்பரீட்சைக்கு நூற்றுக்கும் அதிகமான தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இக்கல்லூரியிலிருந்து தோற்றவுள்ளதாக பகுதித்த தலைவர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

இதே வேனையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்று மூன்றாம் தடவை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பல மாணவர்கள் பொறியியல் , மருத்துவம் , கணிதம் , உயிரியல் , வர்த்தகம் மற்றும் கலைத்துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள் அறிவித்துள்ளதாக கல்லூரியின் உதவி அதிபர் யு.எல்.எஸ்.ஹமீட் மௌலவி தெரிவித்தார்.

1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.