Header Ads



திருமண வீட்டில் வந்து விழுந்த ரொக்கட்டுக்கள் - 15 பேர் மரணம், 40 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்டு பிராந்தியத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திருமண விழா நடந்து கொண்டிருந்தது. மணமகள் அழைப்புக்காக அந்த வீட்டில் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது திடீரென  ஆயுததாரிகள் ராக்கெட் குண்டுவீசி திருமண வீட்டில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் குண்டு வெடித்து 15 பேர் பலியானார்கள். 40–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

திருமண வீட்டில் ஆயுததாரிகள் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆடம்பரமாக விழாக்கள் கொண்டாடுவதை ஆயுததாரிகள் எதிர்த்து வருகிறார்கள். எனவே திருமண வீட்டில் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.