Header Ads



ஆளும்கட்சி விக்கெட்டுக்களை வீழ்த்த, மைத்திரியும், சந்திரிக்காவும் நேரடியாக களத்தில் குதிப்பு


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும்,  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நேரடியாகவே ஆளும் கட்சி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 18 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இருவரும் நேரடியாக களத்தில் இறங்கி ஆளும் கட்சி முக்கியஸ்தர்களின் ஆதரவினை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக சில சிரேஸ்ட அமைச்சர்களை எதிர்க்கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் நேரடியாக தொலைபேசி மூலம் அழைப்புக்களை ஏற்படுத்தி அமைச்சர்களுடன் பேசி வருகின்றனர்.

முதலில் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து பின்னர் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த பலரை மீள இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சிலரை இரகசியமாக சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.