மஸ்ஜிதுகளின் நிருவாகம் சிறப்பாக இடம்பெற கருத்தரங்கு..!
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மஸ்ஜிதுகளின் நிருவாகம் சிறப்பாக இடம் பெறும் பொருட்டு பள்ளி நிருவாகிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று (25) நடாத்தியது
மேற்படிக் கருத்தரங்கு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அஹமட் நசீல் தலைமையில் வெலிகம மர்க்கஸ் மஸ்ஜிதில் இடம் பெற்றபோது ஹம்பான்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்ட பள்ளி வாசல்களின் நிருவாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்தரங்கின்போது வளவாளர்களாக ஜாமியா நளீமியாவின் விரிவுரையாளர் மௌலவி அப்பாஸ் (நளீமி) மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி எம்.ஐ. முனீர் (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment