Header Ads



மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் தோல்வியுறப் போகிறார் - மைத்திரிபால சிறிசேன (வீடியோ)


அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் நகைப்புக்குரிய விடயம் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய கல்வி சேவை சங்கத்தின் விசேட மாநாட்டின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் தோல்வியுறப் போகிறார் என்பதற்கான அறிகுறிகளை அவர்களின் கட்சியினரே ஆரம்பித்து விட்டுள்ளார்கள். ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரங்களின் போது இடம்பெறும் வன்முறைகளின் ஊடாக அவர்களின் சமிஞ்ஞைகள் வெளிப்பட்டுள்ளன.

வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் என்பன மிருகங்களுக்கும், ராட்சதர்களுக்கும் உரித்துள்ள விடயம். எனவேதான், அஹிம்சையானது நாட்டின் சட்ட திட்டமாக அமைய வேண்டும் என கூறுவார்கள்.

அரசாங்கம் வன்முறையின் ஊடாக போலியான அரசியல் செயற்பாடுகளின் ஈடுபட்டாலும், போலி கொள்கைளை வெளிப்படுத்தி பொய்யான தேர்தல் விஞ்ஞாபனங்களை மக்களிடம் வழங்குகிறார்கள்.

No comments

Powered by Blogger.