Header Ads



ஸ்ரீலங்கா முஸ்லிம் வர்த்தக நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பனம் -


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

கடந்த காலங்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் எதிர் கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமுகமாக முஸ்லிம் வர்த்தகர்களின் நலன் கருதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் வர்த்தக நலன்புரிச் சங்கம் இன்று (13) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி வதிவிடக் காரியாலய இணைப்பாளரும் வர்த்தகருமான  இல்யாஸ் ஹாஜியாரை தலைவராகவும் எம்.பி.எம். றாசிக்கை செயலாளராகவும் கொண்டு நாடளாவிய ரீதியில் அங்கத்தவர்களைக் கொண்ட மேற்படிச் சங்க அங்குரார்ப்பன நிகழ்வில்  ஜனாதிபதிக் காரியாலய தொழிற் சங்கங்களின் உதவிச் செயலாளர் ஹேமசிறி ஜயலத் கலந்து கொண்டிருந்தார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் பல வர்த்தகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தலைவர் இல்யாஸ் முஸ்லிம் வர்த்தகர்களின் பிரச்சினைகளை உடநடியாக ஜனாதிபதி, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தி முஸ்லிம் வர்த்தகர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதுடன் எதிர் காலத்தில் வர்த்தகர்களுக்கு மேற்படிச் சங்கத்தின் மூலம் பல உதவிகளையும் பெற்றுக் கொடுக் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2 comments:

  1. VERY GOOD, IF YOU WANT TO KNOW ANY UTTER FOOL YOU CAN SEE THIS PICTURE, THESE CRAZY SHORT MEMORY LOST PATIENT, MR. MAHIND WILL SAVE THEIR TRADE, BRAINLESS PEOPLE

    ReplyDelete
  2. தேர்தல் வரும்போதுதான் எல்லா சங்கங்களும்அமைக்கப்படுகிறது இது செரி எனறு மண்டையை ஆட்டுவதர்க்கு ஒரு கூட்டம் பணப்பேராசை பிடித்த இவர்களுக்கு எதுவும் புரியாது

    ReplyDelete

Powered by Blogger.