நாய்க்கு சோறுவைத்தால், சாகும்வரை வாலாட்டும் (படம் இணைப்பு)
பிரேசில் நாட்டில் ஒருவர் திடீர் உடலநலகுறைவால் பாதிக்கப்பட்டு மயக்க நிலைக்கு சென்றார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஆம்புலன்சில் ஏற்றி சென்ற போது அவரின் வளர்ப்பு நாய் கண்ணீருடன் வாகனத்தை துரத்தியபடி வந்தது. வாகனத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓட முயற்சி செய்தது.
இதனை கண்ட ஆம்புலன்ஸ் குழுவினர் வாகனத்தை நிறுத்தி அந்த நாயை வாகனத்தில் ஏற்றி தனது உரிமையாளரோடு வருவதற்கு அனுமதித்தனர். மருத்துவமனைக்கு மயக்க நிலையில் உள்ள உரிமையாளரோடு உடன் வந்த நாய் அவரின் படுக்கையின் கீழேயே காத்து கிடந்தது காண்போரை நெகிழ செய்தது. தங்களது வாழ்நாளில் இதுபோன்ற நிகழ்வை சந்தித்ததில்லை என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

Post a Comment