Header Ads



உரிய வேலைத்திட்டத்தின் கீழ், மக்களை வெற்றிகொள்ளும் பயணத்தை தொடரவுள்ளேன் - மஹிந்த


உரிய வேலைத் திட்டத்தின் கீழ் நாடு மற்றும் மக்களை வெற்றிகொள்ளும் பயணத்தை தொடரவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அக்குரசையில் 12-12-2014 இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாக தாம் எவருக்கும் சேறுபூச தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொய் பிரசாரங்களுக்கு அடிபணியாது தாய் நாட்டை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதற்கான பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜாபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, எதிர்கால சந்ததியினரின் மேம்பாட்டிற்காக தாம் பொறுப்புடன் செயலாற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.