மைத்திரியின் வெற்றிக்காக முழுமூச்சுடன் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் - ஹரீஸ்
முஸ்லிம் சமூகம் முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து எதை எதிர்பார்த்ததோ, அது நிறைவேறியுள்ளது. இதனால் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவனான தான், இரட்டிப்பு சந்தோசமடைவதாக பாராளுமன்ற உறுப்பினரான ஹரீஸ் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது,
முஸ்லிம்கள் மேற்கொண்ட தீர்மானத்தை, முஸ்லிம் காங்கிரஸ் அங்கீகரித்துள்ளது. இதனடிப்படையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து, முஸ்லிம் காங்கிரஸ் முழு அளவு பிரச்சாரத்தில் ஈடுபடும். கடந்தகால நிகழ்வுகளை தற்போது கிளரி அவற்றை பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
இன்னும் தேர்தலுக்கு சில நாட்களளே உள்ளன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தையும், மைத்திரியை ஜனாதிபதியாக்கும் தீவிர முணைப்புக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளேன் எனவும் ஹரீஸ் எம்.பி. ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் கூறினார்.
.jpg)
yes, that is good or bad but no more chance for you,
ReplyDelete