Header Ads



ஜனாதிபதி தேர்தலின் பின்னர், பொதுபல சேனாவின் தலைவிதி தீர்மானிக்கபடும் - சம்பிக்க ரணவக்க

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சம்பிக்க ரணவக்க,

பொது வேட்பாளருக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் அவ்வாறான ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகவில்லை.

ஹக்கீமின் கொள்கை பிரகடனத்தின் அடிப்படையிலோ, அன்றி, சம்பிக்க ரணவக்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் அத்துரலியே ரத்தன தேரரின் கொள்கைப் பிரகடனங்களுக்கு அமையவோ இங்கு யாரும் செயற்படவில்லை.

பொதுவான கொள்கை பிரகடனம் ஒன்றிக்கு அமைவாகவே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இதில் எந்தவொரு இடத்திலும் அம்பாறை மாவட்டத்தில் தனியான ஒரு நிர்வாகத்தை வழங்குவது தொடர்பாக குறிப்பிடப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட போது பொதுபல சேனா இயக்கத்தினர் எந்த கதையும் பேசவில்லை. தயவுசெய்து அந்த பிரதேசங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்து செயற்படுங்கள். இந்த தேர்தலின் பின்னர் அவர்களின் தலைவிதியும் தீர்மானிக்கப்படும்.

No comments

Powered by Blogger.