சிரியாவில் ''மனித இனம் தனது பல்லாயிரமாண்டு மரபுகளை இழந்திருக்கிறது"
சிரியாவில் நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தால் அங்குள்ள நூற்றுக்கணக்கான புராதன தளங்கள் அழிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டு மற்றும் களவாடப் பட்டு இருப்பதன் அபாய நிலை புதிதாக பெறப் பட்டிருக்கும் செய்மதி படங்கள் மூலம் உறுதியாகி இருப்பதாக ஐ.நா. மன்றம் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் இருக்கும் வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் மற்றும் பண்டைய சந்தைகள் தொடக்கம் உலகப் பிரசித்திபெற்ற பள்ளிவாசல் கள் மற்றும் சிலுவைப்போர் அரண்மனைகள், மதிப் பற்ற எண்ணற்ற பொக்கி'ங்கள் பாதிக்கப்பட் டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதல்கள் காரணமாக 290 தளங்கள் நேரடி யாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. கடந்த செவ்வாயன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதில் 24 தளங்கள் முற்றாக அழி வடைந்திருப்பதோடு 104 தளங்கள் சேதமாக்கப்பட் டுள்ளன. தவிர, 85 தளங்கள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதோடு 77 தளங்கள் சேதத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐ.நா. வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் சிரியா வின் 18 பகுதிகள் கவனத்தில் செலுத்தப்பட் டுள்ளன. இதில் ஆறு பகுதிகள் யுனெஸ்கோ பாராம்பரியத் தளங்களாகும். அலப்போ பழைய நகர், பொஸ்ரா, டமஸ்கஸ், வடக்கு சிரிய டெட் சிட்டி, கிரக் டெஸ் செவலியர்ஸ் அரண்மனை மற்றும் கிரேகோ-ரோமன் பாலைவனச் சோலை ஆகிய தளங்களாகும்.
7000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய குடியேற்றங்கள் பதிவாகி இருக்கும் முன்னாள் வர்த்தக நகரான அலப்போ, சிரிய ஜனாதிபதி ப'ர் அல் அசாத்தின் அரச படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகப்பெரிய மூடப்பட்ட மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தையான அல் மதீனா சவுக் மோசமாக பாதிக்கப்பட் டுள்ளது. அலப்போவில் இருக்கும் 12 ஆம் நூற்றாண்டின் உமய்யத் பள்ளிவாசல் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. பள்ளிவாசலின் மினாரத் கீழே வீழ்ந்திருப்பதோடு புகழ்பெற்ற கார்ல்டன் ஹோட்டல் இருந்த தளத்தில் பாரிய பள்ளம் ஏற்பட்டிரிப்பதும் செய்மதி படங்கள் காட்டுகின்றன.
~~மனித இனம் தனது பல்லாயிரமாண்டு மரபுகளை இழந்திருக்கிறது" என்று இந்த செய்மதி படங்களை பெற்ற ஐ.நாவின் யுனோசெட்டின் இயக்குனர் எய்னர் பிnஜhர்கோ குறிப்பிட்டுள்ளார். சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் கிரக் டெஸ் செவலியர்ஸ் அரண்மனை புகழ்பெற்றதாகும். யுனெஸ்கோவின் மரபுரிமைச் சொத்தான இது தற்போது கிளர்ச்சியாளர்களின் முகாமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. அரச படையின் குண்டு வீச்சுகளால் இங்கு பாரிய ஓட்டை ஒன்று விழுந்துள்ளது. ரோமர் காலத்தின் கண்கவர் தூண்களான பல்மிரா மோசமாக பாதிக்கப் பட்டிருப்பதை ஐ.நா. படங்கள் கட்டுகின்றன.
இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவின் கோட்டையாக இருக்கும் ரக்கா நகரில் உள்ள, சூபி முஸ்லிம் உவைஸ் அல் கார்ன் பள்ளிவாசல் மற்றும் இறைத்தூதர் முஹமது நபியின் தோழர்களில் ஒருவரான அம்மர் இப்னு யாஸிரின் அடக்கஸ்தலம் ஆகியன அழிக்கப்பட்டுள்ளன.
வடமேற்கு மாகாணமான ஹசகேவில் இருக்கும் பண்டைய அசீரிய சிலைகளையும் ஐ.எஸ். குழு அழித்திருப்பதாக சிரிய தொல்பொருள் ஆராய்ச்சி யாளர் சிக்கோமுஸ் அலி குறிப்பிட்டுள்ளார். அசாத் அரசுக்கு எதிராக மூன்று ஆண்டுகளுக்கு முன் அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பமான சிரிய கிளர்ச்சி பின்னர் ஒரு கடுமையான உள்நாட்டு யுத்தமாக மாறியுள்ளது. இந்த யுத்தம் காரணமாக இதுவரை 200,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Post a Comment