Header Ads



உங்கள் வாழ்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம் - ரணில்


வெளிநாடுகளில் சென்று சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆளும் கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் கடந்த 5 வருடங்களில் நான் சிங்கப்பூருக்கு சென்ற காலம் கூட நினைவில் இல்லை.

பொது எதிரணியின் 100 நாள் வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பது மாத்திரமன்றி மாற்று அரசியல் திட்டம் ஒன்றை முன்வைப்பதே எங்களது நோக்கமாகவுள்ளது.

இதன் காரணமாகவே, நாங்கள் பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்துள்ளோம். உங்கள் வாழ்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளையே நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.

இதற்கான 100 நாள் வேலைத்திட்டம் நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளது. இதற்கமைய, அதிக ஆசனங்களை கொண்ட கட்சியின் உறுப்பினர் பிரதமராக தெரிவு செய்யப்படுவார்.

இது ஒரு புதிய அரசியல் கலாசாரம். எமது கூட்டணி மூலம் 10 லட்ச தொழில் வாய்ப்புக்கள் பெற்று கொடுக்கப்படும். நாட்டின் இளைஞர் யுவதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பாது நாட்டிலே தொழில் வாய்ப்புக்களை பெற்று கொடுக்கவுள்ளோம்.

1 comment:

Powered by Blogger.