முஸ்லிம் கட்சிகள் மைத்திரியை ஆதரிக்கும் முடிவு, புதியஅரசியல் கலாசாரம் உருவாவதற்கான தருணம்
-இக்பால் அலி-
எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தம் சமூகத்தின் நலன்கருதி ஒன்றுபட்டு துணிகரமான முடிவுகளை எடுத்துள்ளமையிட்டு நாட்டிலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளதோடு எதிர்காலங்களில் ஒன்றுபட்டுச் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக என்று நிந்தவூர் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மறைந்த அமைச்சரின் மருமகனும் ஆரம்ப கால ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளருமான வைத்தியதிகாரி ஏ. எல் பரீத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
தம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக பிரிந்து சென்ற முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் முஸ்லிம்களுடைய தனித்துவத்தையும் பாதுகாப்பையும் கலாசாரத்தையும் நிலையான இருப்பையும் உறுதி செய்வதற்காக கைகோர்த்துள்ளமை என்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஒன்றுபட்டு செயற்படுவதைப் போன்று புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாவதற்குரிய சிறந்த தருணமும் இதுவேயாகும். மறைந்த அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம். எச். எம். அஷ;ரப் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட்ட இன்றுள்ள அரசியல் தலைமைத்துவங்கள் மீளவும் எமது சமூகத்தின் நன்நோக்கம் கருதி ஒன்றுபட்டு செயற்படும் போது எமக்கெதிராக எழும் சவால்களை ஒரு வலுவான , புத்துணர்ச்சி மிக்க செயற்திறன்களினூடாக வெற்றி கொள்ள முடியும். இந்த ஒற்றுமையை எமது நாட்டிலுள்ள இளைய சந்ததியினர்கள் எதிர்பார்க்கின்றனர்.
1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மறைந்த தலைவர் அமைச்சர் எம். எச். எம். அஷரப்புடன் சேர்ந்து கட்சிக்காக பிரச்சாரம் செய்த காலகட்டத்தில் என்னையும் ஒரு தேர்தலில் நிற்குமாறு வேண்டினார். அரச பதவியில் இருந்ததினால் அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அன்று முஸ்லிம்கள் மத்தியில் காணப்பட்ட அரசியல் மறுமலர்ச்சியை இன்று என்னால் காணக் கூடியதாக இருக்கின்றது. எனவே எதிர்காலங்களில் பிளவு பட்டு செயற்படுவதை விடுத்து ஒட்டுமொத்த அரசியல் தலைமைத்துவமொன்றின் அடியொட்டி முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் தமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும். பதவிக்காகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காவும் தம் கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்களை சமூகம் அடையாளம் கண்டுள்ளது. நான் என்ற மமதையிலிருந்து விடுபட்டு நாம் என்று சிந்தித்துச் துடிப்புடன் சமூக நோக்கத்திற்காக செயற்படுகின்ற அரசியல் தலைவர்களையே மக்கள் விரும்புகின்றனர்.
இனி வரும் காலங்களில் எமது சமூகத்திற்கு வரும் சவால்களை முறியடிப்பதற்கு தூர நோக்குடன் சிந்தித்து செயற்படுவதற்கு அரசியல் தலைமைத்துவங்களின் ஒற்றுமையே பிரதான தேவைப்பாடாக இருக்கிறது.
சிறுபான்மையின மக்கள் மீது அக்கறையுள்ள எதிரணி பொது வேட்பாளரை ஆதரிக்க எமது அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றுபட்டுள்ளதைப் போன்று ஏனைய விடயங்களிலும் இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும். எமது முஸ்லிம் சமூகத்தின் எண்ணங்கள் அபிலாiஷகள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு இந்த ஒற்றுமை வழிவகுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஞான சார அவர்களே, முஸ்லிகளுக்கு ஒருமைக்கு காரணமான உனக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
இந்த ஒற்றுமைகள் போலியானவையும்,நாடகமும் ஆகும்.எதிர்வரும் பெப்ரவரி மாதம் இன்னும் பல பிரிவுகள் உருவாகும் சூழலே காணப்படுகின்றது . ஏனெனில் இவர்களிடம் உலக ஆசை அதிமாக காணப்படுகின்றது .
Haleem neengal solvathu sarithan eppothu maruvaarhal entru sollamudiyathu
Delete