Header Ads



மைத்திரிபாலவின் பிரசார மேடைமீது துப்பாக்கி பிரயோகம், பொலிஸார் வேடிக்கை பார்ப்பு(வீடியோ)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டத்திற்காக வெல்லம்பிட்டியில் அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றின்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவம் இடம்பெற்றபோது அங்கிருந்தமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ரோந்து வாகனமும் அங்கிருந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்லும் வரை அங்கிருந்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே குறித்த மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடமையை நிறைவேற்றத் தவறிய மற்றும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உடந்தையாக இருந்தமை தெரியவரும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டத்திற்காக வெல்லம்பிட்டியில் அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றின்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தன்னியக்க துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்

சில வாகனங்களில் வந்த குழுவொன்றில் இருந்த ஒருவர் தொடர்ச்சியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதென அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது வெற்றுத் தோட்டாக்கள் பல கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் மேடையின் கூரைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.