Header Ads



ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரிக்கு விடுமுறை

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஏதிர்வரும் 2015 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் இறுதித் தவணை விடுமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி டப்ளியு.தீனுல் ஹசன் (பஹ்ஜி) தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் எதிர்வரும்  11-01-2015 ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரிக்கு சமுகந்தரவேண்டும் எனவும் மேலதிகமாக வழங்கப்பட்ட நாட்கள் அடுத்தாண்டின் விடுமுறையிலிருந்து ஈடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு மேற்படி கல்லூரியில் 2015 புதிய ஆண்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவரும்  18-01-2015 ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரிக்கு வந்து சேர வேண்டுமெனவும் மேலும் தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.