Header Ads



ஓட்டமாவடியில் மைத்திரிக்கு அமோக வரவேற்பு (படங்கள் இணைப்பு)


-Ana + எம்.ரீ.எம்.பாரிஸ்-

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைதிரிபால ஸ்ரீசேனவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (29.12.2014) ஓட்டமாவடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எல்.ரீ.எம்.புர்க்ஹான் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைதிரிபால ஸ்ரீசேன, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ராஜித சேனாரத்ன, எம்.எஸ்.எஸ்;. அமீர் அலி, ஐக்கிய தேசியக் கடசியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே, மாகாண சபை உறுப்பினர்களான ஆஸாத் சாலி, எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.