Header Ads



இலங்கையில் பாகிஸ்தானியர் இருவருக்கு மரண தண்டனை

2012 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு பம்பலபிட்டி பகுதியில், 1560 கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்ட இரு பாகிஸ்தானியர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(17) அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1984ஆம் ஆண்டு 13ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் ஆபத்தான ஒளடதங்களை கடத்தும் தடுப்புச் சட்டத்தின்படி மேல் நீதிமன்ற நீதிபதி அய்ரங்கனி பெரோ மேற்படி இருவரையும் குற்றவாளிகளாக இனங்கண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments

Powered by Blogger.