முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்ததாக, மகிந்தவை நம்பிக்கை கொண்டுள்ளேன் - பஷீர் சேகுதாவூத்
-GTN-
நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லீம் மக்களை பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நம்பிக்கை கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த பஷீர் சேகுதாவூத் நேற்றைய தினம் அரசிலிருந்து வெளியேறினார். தாம் வெளியேறியமைக்கான காரணங்களை ஜனாதிபதி மகிந்தவுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
தமது கட்சி எடுத்த தீர்மானத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் முஸ்லீம் மக்களிடையே தமது கட்சி துரோகம் இழைக்கிறது என்ற நிலைப்பாட்டை இல்லாமல் செய்யவும் அதிகாரத்தில் பேராசை கொண்டவர்கள் அல்ல என்பதை தெரிவிக்கவுமே தாம் ராஜினாமாச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தியோ அல்லது நம்பிக்கையின்மை காரணமாகவே தாம் தமது அமைச்சுப் பதவியை ராஜீனாமா செய்யவில்லை என்றும் கூறியுள்ள அவர் நாட்டுப்பற்றுள்ள பிரசையாக அனைத்து மக்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ஆற்றிய சேவையை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையெதிலும் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஓர் அமைச்சரா இருந்து ஜனாதிபதிக்காக வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டமையைிட்டு வருந்துவதை தாழ்மையாக அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்ட தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பஷீச் சேகுதாவூத் ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

HE IS THE SECOND CLASS POLITICIAN ,HE IS NOT A GENTLEMAN IN POLITICS.
ReplyDeleteதிரு.தாவுத் அவர்களே, நீங்கள் ஒரு கனவான் என்று காட்டுவதற்கு முற்படுகிறீர்கள், அந்த முயற்சியை மதிக்கும் அதே நேரம். சாதாரண பாமர மக்களுக்கு விளங்கிக் கொள்ளக் கூடிய விடயம் தான் இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயம், ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம், மத, இன நல்லிணக்கம், ( ராஜபக்ச அன் கோ களின் வீண் விரயம்...etc. இப்படி அடிகிக் கொண்டே போகலாம்) ஒன்றுமே சரியாக அமுல்படுத்தப் படவில்லை, எல்லாமே துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ராஜபக்ச அண்ட் கோ களின் முழு ஒத்துழைப்புடனும் வழிகாட்டுதளுடனுமே நடக்கின்றன என்பது உள்நாட்டிலும் சரி வெளி நாட்டிலும் சரி ( UN முதற்கொண்டு ) உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டில் உள்ளீர்கள். இது உங்களது அப்பட்டமான சுயநலத்தை தவிர வேறு ஒன்று இல்லை.
ReplyDeleteசுய கெளரவமும் தன்மானமும் உள்ள முஸ்லிமின் தீர்மானம் இந்த தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிப்பதே. அவர் வெல்லுவாரா தொப்பாரா என்பது பற்றி சிந்திப்பது இரண்டாவது விடயம்.
மக்களினதும் கட்சியினதும் தீர்மானம் பிழை என நீங்கள் கண்டால் உடனடியாக அந்த கட்சியினால் வழங்கப்பட்ட அனைத்து பதவிகளையும் ( தவிசாளர், பொலிட்பீரோ.. அனைத்தும் ) ராஜினாமா செய்து விட்டு ஒரு சாதாரண தொண்டனாக மாறுங்கள் பார்க்கலாம். வரவிருக்கும் பொதுகூட்டனி அரசாங்கத்தில் எந்த பதவியையும் தான் பெற்று கொள்ள மாட்டேன் என பகிரங்கமாக கூருங்கல் பார்க்கலாம். உங்களால் முடியாது.
நீங்கள் ராஜபக்ச பக்கம் போயிருப்பீர்கள் ( ராஜபக்ச உங்களை கணக்கில் எடுக்க வில்லை.. எல்லோருக்கும் ரிசாத் ஆப்பு வைத்து விட்டு வந்து விட்டார் ) ஆனால் பாராளமன்ற தேர்தல் வருகிறது, இந்த கட்சியை விட்டால் உங்களுது அரசியல் பயணம் அஸ்தமனமாகி விடும். அது தான் நீங்கள் தலைவரின் வாலை பிடித்துக் கொண்டு வந்துள்ளீர்கள்.
தலைவர் ஹக்கீம் அவர்களே, இவர்களை போன்ற சேதாரம் ஏற்படுத்தும் சுயநல வாதிகளை அடுத்த தேர்தலில் மக்கள் முன் நிறுத்துங்கள் மக்கள் ஏற்று கொண்டால் அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்... மக்கள் நிராகரித்தால்.... அதற்கு தலை சாய்த்து, இவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை அப்படியே விட்டு விடுங்கள்.
இதைவிட ஞானசாரவை முஸ்லிமகளின் பாதுகாப்பிற்கு நீங்க நம்பியிருந்தா இன்னும் பொறுத்தமாக இருந்திருக்கும். நீங்களெல்லாம் முஜ்லிம்களின் தலைவர்கள்?
ReplyDeleteஇந்த அறி்க்கையின் மூலம் எம்பி பஷீர் அவர்கள் தனக்கென முன் கூட்டியதான ஒரு பாதுகாப்பை ஏட்படுத்தி்க் கொள்வதோடு கட்சியின் தலைவரை மறைமுகமாக குற்றவாலிக்கூண்டில் நிறுத்தகின்றார், இவர் இவ்வாறான ஒரு அறிக்கையை விடுவது இவரைப்பொறுத்தவரை கட்டாயமானதுதான் ஏனெனில் இவரு்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவி மக்களின் நலன் அல்லது கட்சியோடு ஏட்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிககை ஒன்றுக்காக கொடு்கப்பட்டதல்ல மாறாக கட்சியின் தலைவர் ர ஹகீம் நாட்டில் இல்லாத சந்தர்பம் பார்த்து கட்சியை பிழவு படுத்துவதற்காக ஒரு சூற்சியின் வெளி்ப்பாடாக வழங்கப்பட்டதாகும். கட்சியின் தலைவரின் சானக்கியத்தாலும் தூரநோக்கு சிந்தனையின் மூலமாகவும் ஜெ மஹிந்தவின் நோக்கம் தவிடு பொடியானது, எம்பி பஷீரைப் பொறுத்தவரை ஒரு காலை முஸ்லிம் காங்ரஸிலும் மற்றதை ஜெ மஹந்தவின் அமைச்சுப் பதவியிலுமே வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது நாடறிந்த உன்மை அத்தோடு மு காங்கரஸ் யாரை ஆதறிப்பெதென்பதில் ஏட்பட்ட அனைத்து தாமத்திற்கும் இவரின் நிபந்தனைகளும் காரணம் என்பதி்ல் சந்தேகமில்லை.
ReplyDeleteநான் படித்த இஸ்லாத்தில் அல்லாஹ்வை மட்டுமே நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று தான் இருந்தது. ரசூலுல்லாஹ் இறைவனுடைய தூதர் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் வயிற்றுப்பிழைப்புக்கு தங்கள் ஈமானை அடகு வைக்கவேண்டாம்.
ReplyDeleteI don't understand why SLMC keeping him still in party. actually he had never won any election in his hometown. he have no any public support even in his hometown. he is in national list MP post. why this munafiq we need still in party? SLMC waiting for what in his foolish work?
ReplyDeleteEmaan konda oru muslim kathaikintra kathaiya ithu
ReplyDeleteslmc thalmy mudipu solla thamathm basherthan
ReplyDeleteதங்கள் தனிப்பட்ட முழுமையான ஆதரவையும் வாழ்த்துக்களையும் மகிந்தவுக்கு தங்கள் கடிதங்கள் மூலம் வழங்கி சமூகத்தை காட்டிக்கொடித்திருக்கும் ஹகீம், பஷீர் ஆகிய இருவரும் சமூகத்தை விற்று தங்கள் நலனை கூட்டிகொண்ட "கூட்டிக்கொடுப்பாளர்களும்" ஞானசார தேரர் சொல்லியதுபோல் "அரசியல் விபச்சாரிகளுமே" தவிர வேறில்லை. இவர்களுக்கு தண்டனை கட்சியால் அல்ல, மக்களால் (விரட்டப்பட்ட சைத்தான்கள் என நினத்து) விரட்டி அடிக்க வேண்டும்.
ReplyDeleteMr. Sugu, pls. include below also in your statement,
ReplyDeleteAfter Mahinda, I trust Namal,after Namel, Gottha, after Gottha, Basil, After Basil, Chamal, after chamal SALMAN KHAN....
some time if Mahinda will be win next month Basheer also with mahintha government ,
ReplyDelete