தலைகீழாக சிந்திப்பது தவறே - சேகு இஸ்ஸதீன்

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானம் முஸ்லிம் சமூகத்துக்கிழைத்த மற்றொரு மகா தவறு என மு.கா. முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மைத்திரியை ஆதரிப்பதான முஸ்லிம் காங்கிரஸின் முடிவு சிங்களப் பிரதேசங்களில் சிதறுண்டு வாழும் சகோதர முஸ்லிம்களின் சமாதான வாழ்வையும், பாதுகாப்பையும் சந்தியில் நிறுத்தி சிங்கள மக்களின் முஸ்லிம்கள் தொடர்பான அநுதாப உணர்வுகளுக்கு ஆப்பு வைத்துள்ளது.
மு.காவின் நீண்டகால மெளனத்துக்குப் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் நலன் சார்ந்த முடிவு வருமென்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த முடிவு அரசாங்கத்தின் நல்லெண்ண நாட்டங்களுக்கு வேட்டு வைத்து சிங்கள - முஸ்லிம் கலவரங்களால் சீற்றமடைந்துள்ள வட-கிழக்கு முஸ்லிம்களின் வடிகான் தேடிய இன மத உணர்வுகளை இதமாக நெறிப்படுத்தும் சகல முயற்சிகளையும் தடுத்துள்ளது.
மாறாக அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் போது இந்த உணர்வுகளையூட்டி முஸ்லிம்களை பகடை காய்களாக்கி தமது சுய அரசியல் பதவி வியாபார முதலீட்டுக்குப் பயன்படுத்தவுள்ளனர். இந்த முடிவு சமநிலைச் சமுகமான முஸ்லிம்களின் நாசூக்கான நாகரிக விழுமியங்களை நட்டாற்றில் தள்ளி, ஜனாதிபதித் தேர்தலைக் கேலிக்கிடமாக்கியுள்ளதன் மூலம் அடுத்த மகா தவறை முஸ்லிம் காங்கிரஸ் அரங்கேற்றியுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலங்களை இரண்டு தவணைகளுக்கு மேல் அதிகரிக்க பாராளுமன்றத்தில் தேவைப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்போது ஆதரவு வழங்கி விட்டு இப்போது தலைகீழாக சிந்திப்பதும் ஒரு தவறே.
2005 2010 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் பிழையான முடிவுகளையே எடுத்ததாக முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும், கலைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித் துள்ளார்.
உண்மையில் உங்களுக்கு இது பேரதிர்ச்சிதான்.. அதற்கு தலைவரிடத்திலும் மக்களிடத்திலும் மருந்து இல்லை.. வேண்டுமானால் மகிந்தவிடம் ட்ரை பண்ணி பாருங்களேன்..
ReplyDeleteநாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வார்கள், அதெல்லாம் கணக்கெடுக்கவேண்டிய அவசியமில்லை. பெரிய பருப்பு போல இவர் பேசிறாரே இவர் என்ன செய்திருக்கின்றார் தற்போது என்ன செய்கின்றார் சமுதாயத்திற்கு என்ன செய்தார் இளைஞர்களை எப்படி வழி நடத்தினார், இதெல்லாம் தோண்டப்போனால் பயங்கரமான அழுக்குகள் வரும் ஆகவே. தேவையில்லை என்று நினைக்கின்றோம். இவர் மலையேறிவிட்டார் மலையிலேயே இருக்கட்டும்.
ReplyDeleteசார், ஹக்கீமும், ரிசாத்தும் my3 சார்பாக முடிவெடுப்பதட்கு முன்பு UNP சார்பாக கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு நெசனல் லிஸ்ட் இல் கொடுக்கப்போகிறார்கள் என்று கதை அடிபட்டது அதில் உங்களது பெயர் முன்னிலையில் இருந்தது ஆனால் அதற்கு இப்போது ஆப்பு விழுந்து விட்டது. அதற்கு இப்படி ஒரு நொண்டி சாக்கை கூறி உங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுலீர்கள். அப்படி இந்த இரு கட்சிகளும் மகிந்த பக்கம் இருந்து உங்களுக்கு எதிரணியில் (UNP) எம்பி பதவி கிடைத்திருந்தால் இந்த அறிக்கை வெளிவருமா..??? நீங்கள் இந்த இரு கட்சியையும் திட்டி தீர்திருப்பீர்கள்.
ReplyDeleteஉண்மையில் இந்த ஹகீம், ரிசாத், பெரும்பான்மையான முஸ்லிம் எம்பி மார் இந்த அரசாங்கத்தில் இருக்கும் போதுதான் அத்தனை அநியாயங்களும் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தது, இந்த முஸ்லிம் அமைச்சர்கள், எம்பி மார்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கான காரணம் நாட்டில் உள்ள சிங்கள மக்கள் அல்ல. ராஜபக்ச அன் கோ தான். இந்த குடும்ப ஆட்சியை மாற்றினால் நிறைய விடயங்களில் மாற்றம் வரும் என நம்புகிறோம்.
திரு. சேகு இஸ்ஸதீன் அவர்களே, இப்படி கூறும் நீங்கள் ராஜபக்சவுக்கு சார்பாக (ஒரு டீலை போட்டு ) மேடையில் ஏறி பிரச்சாரம் செய்யுங்கள் பார்க்கலாம். மக்கள் இதை எப்படி பார்கிறார்கள் என்று பாப்போம்.