Header Ads



ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கேட்ட மைத்திரி


பொது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன தொழிற் சங்கங்களை சந்திக்கும் கூட்டம் ஒன்றுக்காக கொழும்பிலுள்ள அவரது தேர்தல் செயல்பாட்டு அலுவலகத்திற்கு வருகைதந்திருந்தார்.

தொழிற்  சங்களுடனான சந்திப்பில் ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்தமையை கவனித்த மைத்திரி, ஊடகவியலாளர்களை இந்த கூட்டத்திற்கு அழைக்கவில்லையே; இது தொழிற் சங்கங்களை சந்திக்கும் கூட்டம் என்று அலுவலக அறையை விட்டு வெளியேறினார். ஊடகவியலாளர்கள் இருந்தால் கூட்டம் நடக்காது என்ற முடிவெடுத்துவிட்ட மைத்திரி பின்னர் இது தொழிற் சங்கங்களை சந்திக்கும் கூட்டம். இதற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படவில்லை தவறுக்கு மன்னிக்கவும் என்று  ஊடகவியலாளர்களிடம்  கூறினார். ஊடகவியலார்கள் வெளியேறியதும் கூட்டம் ஆரம்பமானது.

No comments

Powered by Blogger.