Header Ads



பிறக்கப் போகின்ற குழந்தைகளுக்காகவும் நாட்டை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது - மகிந்த

இன்னொரு நாட்டின் ஆட்டுவிப்புகளுக்கு ஆடும் பொம்மையாக இலங்கையை மாற்றுவதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள சில வங்குரோத்து அரசியல்வாதிகள் மேற்கத்தேய நாடுகளுடன் இணைந்து, பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வெற்றிகளை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிறந்த மற்றும் பிறக்கப் போகின்ற குழந்தைகளுக்காகவும் நாட்டை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதனை விடுத்து நாட்டை துண்டு துண்டாக பிரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.

30வருடங்களாக காணப்பட்ட யுத்தம் நிறைவு செய்யப்பட்டு தற்போது சமாதானம் ஏற்பட்டு நாடும் அபிவிருத்தியை நோக்கி நகர்கிறது.

இந்த நிலைமையை மாற்ற அனுமதிக்க கூடாது என்று ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.