Header Ads



தம்பி, ரிஷாத் பதியுத்தீன் நல்லவர் - அஸ்வர்

தனிமனிதன் செய்த தவறுக்காக முழு மாவட்ட மக்களையும் தண்டிக்க நாம் தயாரில்லை வன்னி மாவட்டத்திற்கான அபிவிருத்திகள் தொடர்ந்தும் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுமென ஊடகத்துறைக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அஸ்வர் தெரிவித்தார்.

வன்னி ஜும்ஆ பள்ளிவாசல், மடுகந்த வித்தியாலயம், ரம்பைக்குளம் உட்பட பல பகுதிகளிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவளித்து நடத்தப்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்களில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில், தம்பி ரிஷாத் பதியுத்தீன் ஒரு நல்லவர். அதனால்தான் அரசாங்கம் அவர் கேட்ட உதவிகளை எல்லாம் அரசு வழங்கியது.

அதிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய உதவிகளை வன்னி மக்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். எனினும் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சர்வதேச ரீதியில் பின்னப்படும் சதி வலையில் அவர் இப்போது சிக்கியுள்ளார்.

இதனை செய்தவர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க. அமெரிக்க ஏகாதிபத்தியம், நோர்வே, சி.ஐ.ஏ. மொஸாத், இஸ்ரவேலர்கள் போன்ற சர்வதேச பரம முஸ்லிம் விரோத சக்திகளின் உற்ற தோழன் ரணில் என்பது உலகமறிந்த விடயம். அவர் வலையில் சிக்கினால் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் பயங்கர விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரும். ஈராக், லிபியா, சிரியா, எகிப்து போன்ற நாடுகளின் அரும்பெரும் தலைவர்களை அரபு வசந்தம் என்ற பெயரில் அழித்துவிட்டது ஏகாதிபத்திய அமெரிக்கா தான் என்பதை உலகறியும்.

சதாம் ஹுசைன், முஹம்மத் கத்தாபி போன்றவர்கள் உலக முஸ்லிம்களுடைய எழுச்சிக்காக வேண்டி உழைத்தவர்கள். உதவிகளை செய்தவர்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட எகிப்தின் ஜனாதிபதி இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முர்ஷியை வீழ்த்தியவர்கள் இந்த ஏகாதிபத்திய வாதிகள். இவர்களின் உற்ற தோழன் ரணில் விக்கிரமசிங்கவோடு நாம் எந்த முறையில் தோழமை கொள்ள முடியும். முஸ்லிம்கள் இதனை நிதானமாக சிந்தித்து பார்க்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பதை நாம் நன்கு அறிவோம். ஜனாதிபதியுடனும் கோதாபய ராஜபக்ஷ உடனும் பேச்சு வார்த்தைகள் நடாத்தி, அதில் நல்ல முடிவு எட்டப்பட்டதாக ரிஷாத் பதியுத்தீன் அறிவித்திருந்தார். சீனக்குடா கருமலையூற்று பள்ளிவாசலில் தொழுவதற்கு வசதி செய்து தருமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுக்கும்படி அவர் கோதாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டார்.

அதற்கிணங்க முஸ்லிம்கள் தொழுவதற்கு வசதிகளை அவர் செய்து கொடுத்ததாக ரிஷாத் அவர்களே அறிவித்திருந்தார். சென்ற வெள்ளிக்கிழமை இப்பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையும் நன்றே நடைபெற்றது. ஒரு இமாமும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பல காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ரிஷாத் வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு செயலாளர் உடனடி தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இதனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இறுதிவரை ஆதரிப்பதாக தமது கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள் ளதாகவும் அவர் பிரகடனம் செய்தார்.

நம்பிக்கைத் துரோகம் செய்வது இஸ்லாத்தில் மாபெரிய குற்றமாகும். இது படுமோசமான நயவஞ்சகத்தனம். மேலும் பிரச்சினை இருந்தால் அவர் முன்னரேயே அரசாங்கத்துடனான தொடர்பை அறுத்திருக்க வேண்டும். அத்தனை உதவிகளையும் பெற்று மிக முக்கியமான வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் பல நன்மைகளை பெற்றுக் கொண்டு, முஸ்லிம் நாடுகளுக்கு சென்று பல அனுகூலங்கள் பெற்று இறுதியாக இப்படியாக நடந்து கொண்டது இஸ்லாமல்ல. முஸ்லிம்களுடைய பண்பும் அல்ல.

7 comments:

  1. Can't you remember how you crossover from UNP to PA?

    ReplyDelete
  2. இது பேச்சு... ஜனநாயகமான பேச்சு.. இப்படி உங்களது கருத்துக்களையும் ஆதங்கத்தையும் மக்களின் முன் வையுங்கள் மக்கள் தீர்மானிப்பார்கள்.

    I'm very sorry my dear...you lost your MP post..what to do... keep on touch with MR.. you may get it.

    ReplyDelete
  3. Mr Azwer you are very selfish whole Muslims know about it. We had to show many photos you were kissed president hand. that is your duty we do not care about it. now you think about your death and aakira life.

    ReplyDelete
  4. Yes, per your advice, as a Muslim, I deeply pondered your statement. The leaders you mentioned Ghadhafi, Sadhaam Hussain & Hosni Mubaaraq became Imperialists & ripped off billions of national wealth.We hate to see the same in SL, though you may love the millions out of it.

    ReplyDelete
  5. அஸ்வர் ஹாஜி எங்கட ஊர்பக்கம் கொஞ்சம் வாங்களே. உங்களுக்கு பொண்ணாடை(?) போர்த்த நாங்க ஆவலா இருக்கிறோம்.

    ReplyDelete
  6. ரிஷாட்டுக்கு இவர் இஸ்லாமிய பண்பு பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இரக்கிறது அறபு வசந்தம் பற்றி பேசுகிறார் ஏன் அறபு வசந்தம் ஏற்பட்டது மஹிந்த ஆட்சி போன்று அடக்கு முறைகளும் பொருளாதார சுறண்டல்களும் ஆட்சி பீடத்தில் உ்ளவர்களிடம் குர்ஆன் சுன்னா வாழ்க்கை இல்லாமல் போனது என்னை தட்டிக்கேக்க யாரும் இல்லை என்ற மமதையில் வாழ்ந்ததின் காரணம்தான் றோட்டில் போட்டு அடித்து கொல்லும் அளவு அல்லாஹ் கேவலப்படுத்தனான் என்றால் இஸ்லாமிய ரீதியில் ஆழமாக சிநதிக்க வேண்டும் அல்லாஹ் நல்லவரகளை சோதிப்பான் ஆனால் கேவலப்படுத்தமாட்டான் கடாபிக்கு பொடிகாட் பெண்கள் இவர்கள் அவருக்கு மஹ்ரமியான பெண்களா அதுவும் அறைகுறை ஆடை இப்படிப்பட்டவர்களா குர்ஆன் சுன்னா வழியில் ஆட்சி செய்வது நாற்பது வருடத்ததுக்கு மேல் ஒரு நாட்டை ஆண்ட ஒருவருக்கு ஏன் அல்லாஹ் இப்படி செய்தான் சிந்திக்க வேண்டியது அன்புள்ள முஸ்லிம்களே

    ReplyDelete
  7. அஸ்வர் அவர்களே.... நீங்கள் ரணில் பற்றி தெரிவித்துள்ள அனைத்து விடயங்களும் உண்மை. மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அவரது பிரதமர் ஆட்சியில் புலிகளோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களும், தலைவர் அஸ்ரப் அவர்களின் அரசியல் திருத்தங்களை பாராளுமன்றத்தில் கசக்கி எறிந்த நிகழ்வுகளும் அஷ்ரப் அவர்கள் ரணில் பற்றி சொன்னது எல்லா இலங்கை முஸ்லிம்களும் நினைவில் வைத்திருக்கவேண்டியவை. ஆனால்.... இங்கு முஸ்லிம்களாகிய நாங்கள் இன்று முடிவெடுத்திருப்பது ரணிலை ஜனாதிபதியாக்கவோ, (ரணிலும் அவரின் கட்சியாளர்களும் கற்பனையில் திளைப்பதுபோல்) ரணிலின் அரசாங்கத்தை அமைக்கவோ அல்ல. மாறாக மைத்திரியை தலைமையாகவும், சந்திரிக்காவை ஆலோசகராகவும் ராஜித போன்ற நல்லவர்களையும் (அவ்வாறே ரணிலின் கட்சியாளர்கள் உட்பட) கொண்ட ஆட்சியினை அமைப்பதற்கே! இதில் ரணிலின் திருவுதாளங்கள் பலிக்காமல் நிச்சயம் ஏனையவர்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்களுக்கு கவலை வேண்டாம். அதோடு அதி முக்கியமாக அல்லாஹ்வின் நாட்டமும் ஏற்பாடும் இந்த ஆட்சிமாற்றத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனவே நீங்களும் இதை புரிந்து அல்லாஹ்வை நம்பி எம்மோடு இணையுங்கள். இல்லையேல் நீங்கள் நஷ்டவாளியாகலாம்.

    ReplyDelete

Powered by Blogger.