Header Ads



மைத்திரியுடன் பைஸர் முஸ்தபா சந்திப்பு (படம் இணைப்பு)

-அஸ்ரப் ஏ சமத்-

சிங்கபூரிலிருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடுதிரும்பிய முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதியமைச்சர் முஸ்தபா, கடந்த 26 ஆம் திகதி சிங்கபூருக்கு பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

நான் எனது முஸ்லீம் சமுகத்தின் நன்மையைக் கொண்டே சிந்திக்கிறேன். அரசின் பக்கம் மிகவும் நெருக்கமாக பொதுபலசேனா இயங்கிக் கொண்டிருக்கின்றது. எனது சமுகம் சார்ந்த நன்மை தீமைகளையே நான் சிந்திக்க வேண்டும். அரசின் பக்கம் பொதுபலசேனா மிகவும் நெருக்கமாக தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றனர். தற்பொழுதும் முஸ்லீம் சமுகத்திற்கு எதிராக வாந்திகளை பரப்புகின்றனர். அரசு இவர்களை ஆரம்பத்தில் இருந்தே கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஆகையால் நான் எனது மணச்சாட்சிப்படி  எவ்வாறு அரசில் இருந்து கொண்டு முஸ்லீம்களிடம் போய் அரசுக்கு ஆதரவு தேடுவது?   என கேள்வி எழுப்பினார்.

2 comments:

  1. ஜப்னா முஸ்லிம் அவசரப்படவேண்டாம், இப்படிப்பட்ட விடயங்களை நீங்கள் சற்று அதிகமாக யோசித்து செய்திகளை சமுதாய நன்மைக்காக சில விடயங்களை தணிக்கை செய்யவேண்டியும் உள்ளது. இதை கண்டிப்பாக நீர் மனதில் வைத்து செயற்படுவது சாலச்சிறந்தது.

    ReplyDelete
  2. Waiting all these days with MR will raise doubts on you. Are you really taking this decision for the sake of your community, Country in mind? or for ministerial positions?If your intentions are pure then you shouldn't be demanding positions if the common opposition wins.

    ReplyDelete

Powered by Blogger.