தங்கச்சியைக் காட்டி, ராத்தாவுக்குக் கல்யாணம் முடித்தல்..!
(முஹம்மத் ஷெளகி)
தொழில் நுட்ப வசதிகள் இல்லாத, படிப்பறிவும் பெரிதாக இல்லாத காலத்தில் அழகான தங்கையைக் காட்டி அழகற்ற ராத்தாவைக் கல்யாணம் முடித்துக் கொடுத்த கதைகள் கிராமங்களில் ஒரு காலத்தில் அநேகம் நிகழ்ந்து வந்துள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இப்போது இதே விளையாட்டைத்தான் ஜனாதிபதித் தேர்தலில் நடத்திக் கொண்டிருக்கிறது.
பெருந் தலைவருக்குப் பிறகு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது பா.உக்கள், மா.ச. அங்கத்தவர்கள் மூலம் பொதுவான அரச ஒதுக்கீட்டு நிதியை மட்டுமே வைத்துச் சமூகத்துக்குத் தாப்புக் காட்டி வந்ததுடன் போராளிகளுக்குத் தாம் உரிமை அரசியல் செய்வதாகச் சொல்லிச் சொல்லி அவர்களை அதற்கு மேல் சிந்திக்க விடாமலே காய்நகர்த்தி வந்துள்ளது.
காலம் செல்லச் செல்லப் பொதுமக்களும் கற்றறிந்த இளைஞர் படையும் உரிமை என்று தமக்குச் சொல்லப்பட்டதெல்லாம் வெறும் பாசாங்கு என்பதைப் புரிந்து கொண்டன. பதவிகளுக்கு மட்டுமே அதன் தலைவர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதையும் உணரத் தலைப்பட்டனர். வெளியே உரிமையும், சமூக ஒற்றுமையும் பேசும் இவர்கள் பதவிகளை மையப்படுத்தி நகர்வதையும் சமூகத்துக்கு இக்கட்சியால் எதுவும் ஆகப்போவதுமில்லை என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளத் தலைப்பட்டனர்.
மக்களிடம் இருந்து எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத ஒரு கட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்படுவதை உணர்ந்து கொண்டது அதன் தலைமை. எனவே அது இறுதியாகக் கையில் எடுத்த விடயமே கரையோர மாவட்டம் என்ற தங்கையைக் காட்டி எதிர்வரும் தேர்தல்களைக் கடந்து செல்வதாகும். இதன் மூலம் தம்மையும் கட்சி முக்கியஸ்தர்களையும் பதவிகளையும் காப்பாற்றிக் கொண்டு போராளிகளுக்கும் சமூகத்துக்கும் ராத்தாவைக் கட்டி வைப்பதுமாகும்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில் ஒரு மாவட்டம் உருவாக முடியாது. ஆனால் கிடைக்கிறதோ இல்லையோ வர்த்தமானியில் வரவைத்து விட்டால் சமூகத்துக்கு ராத்தாவைக் கட்டிக் கொடுத்து விட்டுத் தப்பித்து விடலாம்.
அதாவது அரசுடனே இருப்பதற்கும் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் கட்சிப் பிளவைத் தடுப்பதற்கும் அடுத்த தேர்தலுக்கான முதலீடாகப் பயன்படுத்துவதற்கும் இது வாய்ப்பாக அமைந்து விடும். இதோ நாங்கள் உரிமை பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று போராளிகளுக்கும் பொதமக்களுக்கும் படம் காட்டிக் கொண்டே எதிர்வரும் தேர்தல்களைக் கடந்து விட அக்கட்சி தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த முடிவுக்கு கட்சி அல்லது அதன் தலைமை வருவதற்கான சூட்சுமம் ஏறாவூரில் இருக்கிறது. முதலில் தலைமைக்கு அவ்வூரில் ஒரு மந்திரக்காரர் மட்டுமே இருந்தார். அமைதியாகவும் அலட்டிக் கொள்ளாமலும் இருக்கும் அந்த மந்திரக்காரர் காரணமாகவே அக்கட்சியின் மூலம் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிப் போனார்கள். இவர்களை வைத்துக் கொண்டால் சமாளிப்பது சிரமம் என்பதற்காக அவர்களைத் துரத்தி விடுவதற்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டவரே அவர்தான். அந்த மந்திரக்காரரைச் சுற்றிச் சுற்றி அல்லது அந்த மந்திரக்காரரின் மந்திரத்தின் படியே சாவி கொடுத்த பொம்மை போல தலைமை இயங்கிக் கொண்டிருந்தது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பிறகு அதே ஊரில் இன்னொரு மந்திரக்காரரும்; இணைந்து கொண்டார். அரசை விட்டு விலக எக்காரணம் கொண்டும் விரும்பாத இந்த இரண்டு மந்திரக்காரர்களாலும் அந்தத் தலைமை என்றைக்குமே சுயமாக இயங்க முடியாமல் தத்தளித்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அந்த மந்திரக்காரர்களிடமிருந்து விடுபட முடியாத மந்திரங்களால் தலைமை கட்டுண்டு கிடக்கிறது. அந்த மந்திரங்கள் எவை என்பது மக்களுக்கு எதுவும் தெரியாது. தெரிந்தவர்கள் கூட்டு வியாபார நடவடிக்கைகள்தாம் என்கிறார்கள்.
எனவே மந்திரக்காரர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் இயங்குவதாக இருந்தால் சமூகத்துக்கு எதிராகச் செயல்பட வேண்டி வரும். மந்திரக் காரர்களை மசிய வைக்கும் எந்த விதத் தந்திரமும் கைவசமற்ற தலைமைக்குச் சமூகத்தைப் பேய்க்காட்டுவதைத் தவிர வேறு வழியே கிடையாது. எனவே கரையோர மாவட்டம் என்ற தங்கையைக் கையில் எடுத்திருக்கிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை.
ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, நாரே தக்பீர் முழங்க, முஸ்லிம் பொதுமகனுக்கும் போராளிகளுக்கும் வெகுவிரைவில் தலைவர் தலைமயில் ராத்தாவைக் கட்டி வைப்பார்கள்!
(இக்குறிப்பு இன்றைய அரசியல் நிலையைக் கொண்டு எழுதப்பட்டது.)
SLMC becomes a curse for Muslims in SL.
ReplyDelete
ReplyDeleteJafeer Cader allah ethai naaduginrano athuthan nadakkinrathu,oru muslim innoru muslimmai {SLMC or LEADER} vimarsikkamal tholukaiyum+duavavaiyum kondu nallatchiyai khetpom. MANITHAN NANMAIYANATHAI PIRARTHANAI SEYVATHU POL,SILAVELAYIL THEEMAYAYUM PIRARTHANAI SEYKINRAN PORUMAYAI ILANTHAVANAGA IRUKINRAN (QURAN)
முஹம்மத் ஷெளகி, எனது மனக்குமுறலை அப்படியே எழுதியுள்ளீர்கள். மிக மிக உண்மை. மிக்க நன்றி.
ReplyDeleteஆட்டுபவர்கள்.. ஆடுபவர்கள்... எல்லோரையும் அகற்றி பொருத்தமானவர்கள் கட்சியையும் மக்களையும் வழிநடத்த தெரிவு செய்யப்பட வேண்டும்.
SLMC ethaicheikiratho athu udanae vimarcikkapadkirathu. akkaraipattil Nuracholai veetuthittam pol thaam Muslimka musleekalai kaattikkoduppathan moolam muslimkalukku idaikkum vaaippukalai ilanthaarkal. aakkapoorvamaana vimarsanamaka irunthaal OK, but veen vampukku vimar seiya vendaa, aaraalum kuthi arisi varattum enrillaamal ellaavattariyum vimarsikkaum thanmai jaffna muslimukkum undu.
ReplyDeleteGood.Real story. but who will lead the srilankan Muslim community???.....
ReplyDelete