Header Ads



மக்கா பெரிய பள்ளிவாசலில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது

(Tn)

மக்கா பெரிய பள்ளிவாசலை விரிவுபடுத்துவதற்கான அகழ்வு நடவடிக்கையின்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் எலும்புகள் பண்டைய அடக்கஸ்தலத்தைச் சேர்ந்ததல்ல என்றும் மிருகமொன்றின் எச்சமாக இருக்கலாம் என்றும் இரு புனித பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

பள்ளிவாசலின் கிழக்கு பகுதியில் இருக்கும் சபா மலைப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபடும் பணியாளர் ஒருவர் கடந்த வாரம் எலும்புகளை கண்டெடுத்த சம்பவம் சமூக தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பள்ளிவாசலை விரிவுபடுத்தும் பணியில் எந்தவொரு பண்டைய அடக்கஸ்தலங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கண்டெடுக்கப்பட்டிருக்கும் எலும்புகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சமூக தளங்களில் வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் குழியொன்றை தோண்டி மேலும் எச்சங்களை தேடுவது பதிவாகியுள்ளது.

இதனையடுத்து சவு+தி அரேபியாவின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் ஆணைக்குழு குறித்த பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மக்கா பெரிய பள்ளிவாசலை விரிவாக்கும் திட்டத்தின் மூன்றாவது கட்ட கட்டுமானப் பணிகளே தற்போது இடம்பெற்று வருகிறது.

விரிவாக்க பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் மன்னர் அப்துல்லாஹ் வாயிலின் வலது மூலலைக்கு அருகில் உஸ்மானிய வழிப்பாதையில் இந்த எலும்புகளை கண்டெடுத்திருப்பதாக தொல்லியல் ஆய்வாளர் சமீர் பர்காஹ் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.