Header Ads



மஹிந்தவுக்கு, மைத்திரியின் பதிலடி...!


தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு 11 மணித்தியாலங்களுக்கு முன்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தம்மிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் இணையவுள்ளதாக குறிப்பிட்டதாக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கிருலப்பனையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறிய போது, ஆம். அவர் வருவார் என்று தாம் சிரித்துக் கொண்டு பதிலளித்ததாக மைத்திரி குறிப்பிட்டார்.

தாம் இறுதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் ஒன்றான அப்பம் சாப்பிட்ட பின்னர் சொல்லாமல் வெளியேறியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்தநிலையில் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன என்று மைத்திரி கேள்வி எழுப்பினார்.

அப்பத்தை தூக்கி எறிந்து விட்டு வருவது கலாச்சாரமான செயல் அல்ல என்று மைத்திரி குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.