Header Ads



கடாபிக்கு செய்ததை, இந்த மஹிந்தவுக்கு செய்ய முடியாது - ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாது காப்பே எமக்கு முதன்மையானது. அதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலுக்காக வடக்கிலிருந்து மாத்திரம் அதி உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்ற முடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சிலர் அரசியலுக்காக எதனையும் வழங்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

ஹங்வெல்ல நகரில் இடம்பெற்ற பிரதான தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

தமது இனத்தை அடகுவைத்து ஆதரவு தர இருக்கும் நபர்களும் உள்ளனர். முஸ்லிம் மக்களை அடகு வைத்து மறுபக்கம் கட்சி தாவியவர்களும் இருக்கிறார்கள். சில தலைவர்கள் 2005, 2010 காலப்பகுதியில் எம்முடன் இருக்கவில்லை வென்ற பின்னர் எம்முடன் சேர்கின்றனர். அவ்வாறு கட்சிதாவியவர்களை மீள இணைத்துக்கொள்ள மாட்டோம்.

நாட்டை முன்னேற்ற மக்கள் எனக்கு ஆணை வழங்கினார்கள். நிறைவேற்று அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தினோம். யுத்தத்தையும் முடித்தோம். படலந்த முகாம் அமைக்க நாம் அதனை பயன்படுத்தவில்லை. படலந்த வதை முகாமில் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். கடாபிக்கு செய்ததை இந்த மஹிந்தவுக்கு செய்ய முடியாது. அதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். கலாசார பண்புகளுடன் வளர்ந்த மக்கள் வாழும் நாட்டில் லிபியாவில், சிரியாவில் நடக்கும் கூத்து போன்று இங்கு செய்ய முடியாது. மாற்றம் குறித்து பேசுகின்றனர்.

மேலைத்தேய நாடுகள் நாட்டை ஸ்தீரமற்ற நிலைக்கு தள்ளுவதற்காக பயன்படுத்தும் முறையே இது. நீங்கள் அளிக்கும் வாக்குகள் உங்கள் பிள்ளையின் எதிர்கால உரிமையை பாதுகாக்கும் வாக்காகும். உங்கள் உரிமையை சரிவர நிறைவேற்றுங்கள் என்றார்.

No comments

Powered by Blogger.