Header Ads



கல்முனையில் நீலப் படை அணி (படங்கள் இணைப:பு)

(அகமட் எஸ். முகைடீன் + பி.எம்.எம்.ஏ.காதர்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள நீலப் படை அணியினரின் மக்களை விளிப்பூட்டும் பிரச்சார நடவடிக்கை இன்று (29) காலை கல்முனை நகரிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கல்முனை  மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.எம்.ரகுமான் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சார நடவடிக்கையில் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நீலப்படையினர்  கலந்து கொண்டனர்.

இவர்கள் கல்முனை மாநகர பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்குச் சென்று பொது மக்களை விளிப்பூட்டும்வகையில் துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தனர்.  



2 comments:

  1. SUYA NALATHUKKAAGA PAITHIYAM PIDITHU ALAHIRAARGAL

    ReplyDelete
  2. ஞான சாரர் தேரர் அவர்களே, பாருங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் ஜனநாயகம் எப்படி உள்ளது.

    ரியாஸ், சிராஜ், ரஹ்மான் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள். தயவு செய்து இதே உரிமை உங்கள் எதிரணிக்கும் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். வாழ்க ஜனநாயகம்... வளர்க ஸ்ரீ லங்கா....!

    ReplyDelete

Powered by Blogger.