Header Ads



நாரஹேன்பிட்டியில் மஹிந்தவிற்கு வாக்களிக்க அரச ஊழியர்களுக்கு பலவந்தம் - வாக்குபதிவு நிறுத்தம்

கொழும்பு நாரஹேன்பிட்டி இ.போ.ச பஸ் டிப்போவில் நடைபெற்றுக் கொண்டிருந்த தபால்மூல வாக்குபதிவு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 23-12-2014 இடை நிறுத்தப்பட்டுள்ளது.

அரசுக்கு ஆதரவான குழு அந்த வாக்கு பதிவு நிலையத்திற்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்தியதே இந்த இடை நிறுத்தத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்குமாறு ஊழியர்கள் பலவந்தப்படுத்தப்பட்டதால் இந்த நிலை தோன்றியுள்ளது. முடிவாக இந்த வாக்கு பதிவை ரத்து செய்ய தேர்தல் அதிகாரி தீர்மானித்துள்ளார்.

No comments

Powered by Blogger.