Header Ads



ஜனாதிபதி தன்னை மன்னராக, நினைத்து, அதற்கான சொரூபத்தை எடுத்துக்கொண்டார் - மைத்திரிபால சிறிசேன

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு முறையிலும் வாக்கு கொள்ளைக்கு இடமளிக்கப் போவதில்லை என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகாராம – ரன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இந்த நாட்டில் பொது மக்களின் பலத்துடன் அன்று யுத்தம் நிறைவு செய்யப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. தேசியக் கொடியுடன் வீதிக்கு இறங்கிய பொது மக்கள் ஜனாதிபதி தமது மகா ராஜன் என்று வர்ணித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

பாடல்களை திரிபு படுத்தி பாடியமை யாரும் மறக்கமாட்டார்கள். நாட்டு மக்கள் அவரை மன்னர் என்று வர்ணித்த போது, ஜனாதிபதி தன்னை மன்னராகவே, நினைத்துக்கொண்டு அதற்கான சொரூபத்தை எடுத்துக்கொண்டார்.

தன்னை ஆட்சியில் அமர்த்திய பொதுமக்களை மறந்தார். அதனாலேயே முறைகேடான ஆட்சி இந்த நாட்டில் நிலைபெற்றது என மைத்திரிபால சிறிசேன தனது உரையில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.