மக்கள் பேஸ்புக் போலிப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்துவிடக் கூடாது - ஜனாதிபதி மஹிந்த
-gtn-
மக்கள் பேஸ்புக் போலிப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்துவிடக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் சமூக வலையத்தளத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வெறுமனே மாற்றம் அவசியம் தேவை என்பதனை விடவும் எதற்காக மாற்றம் தேவை என்பது முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் லிபிய அதிபர் முஹம்மர் கடாபிக்கு நேர்ந்ததே தமக்கும் நேரும் என சிலர் குறிப்பிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் எவராலும் தம்மை தோற்கடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி யுத்தம் முடிவுறுத்தப்பட்டதாகவும் அதனையே மக்கள் விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்குமாறு சில தரப்பினர் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றிக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையிலும், கொழும்பிலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுவதாகவும் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை மட்டும் எவ்வாறு அகற்றுவது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தவோ அல்லது தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டவே இடமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

do you know why people need chance ? you and your families are eating all Sri Lankan's resources, nothing left for country. if my3 comes he need to work hard to work to repair the country.
ReplyDeleteYes, true.
Delete