Header Ads



அசாங்கமும், பொதுபல சேனாவும் அரசியல் விபச்சாரம் செய்கின்றன - முஸ்லிம் காங்கிரஸ்

முழுமையான கரையோர மாவட்டத்தை வழங்குவதாக 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் தம்முடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

இதுகுறித்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொடர்ந்து தகவல் வழங்கிய ஹசன் அலி குறிப்பிட்டதாவது,

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் வரைக்கும் அம்பாறையில் கரையோர மாவட்டத்தை வழங்குதற்கே அரசாங்கம் சம்மதித்திருந்தது. 2007 இல் அரசாங்கம் இதற்கு இணக்கம் தெரிவித்துவிட்டது. அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முஸ்லிம் காங்கிரஸுக்கு எழுதுத்மூலமாக அனுப்பியிருந்த பல கடித ஆதாரங்கள் எம்மிடமுள்ளன. இவை அனைத்திலும் கரையோர மாவட்டத்தை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.

மேலும்  அமைச்சர் ஜோன் செனவிரட்ணா கூட, முஸ்லிம் காங்கிரஸுக்கு இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார். உண்மையான நிலைமை இவ்வாறு இருக்க, இப்போது அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸினை வசைபாடும் வேலையை ஆரம்பித்துள்ளது. மிகவிரைவில் பகிரங்க ஊடகவியலாளர் மாநாடு மூலம் இந்த விடயங்களை மக்கள் முன் பகிரங்கப்படுத்துவோம்.

அரசாங்கம் இறுதிவரை கரையோர மாவட்டத்தை தருவதாக சொல்லிக்கொண்டிருந்தமையால்தான், முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதற்கும் கால தாமதம் ஏற்பட்டது.

இங்கு அரசியல் விபச்சாரத்தில் ஈடுபடுவது அரசாங்கமும், பொதுபல சேனாவும் மாத்திரம்தான். முஸ்லிம் காங்கிரஸுக்கும், ரவூப் ஹக்கீமுக்கும் அரசியல் விபச்சாரம் செய்யத்தெரியாது. அதற்கான தேவையும் இல்லை. நேர்மையான அரசியலையே நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

அதேவேளை கட்சியின் தவிசாளர் பஸீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் குறித்தும் நான் எதுவும் கூறவிருபம்பவில்லை. கட்சியின் உள்ளக மட்டத்தில் ஆராயப்பட வேண்டிய விடயங்களை ஊடகங்கள் மூலமாக விவாதித்துக்கொண்டிருக்க நான் தயாரில்லை எனவும் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் கூறினார்.


3 comments:

  1. செயலாளர் அவர்களே நீங்கள் அரசிடம் கேட்டது கரையோர மாவட்ட அதிகாரமா அல்லது தனி முஸ்லிம் அலகு ஒன்றா இதை ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்துங்கள் ஏன் என்றால் எதோ நீங்கள் நாட்டை பிரிக்க சொன்னமாதிரி அமைச்சர்கள் பலர் அதிலும் அந்த துவேசிகள் காணததர்த்கு ஒரு காரைதீவு தமளரும் கூட அறிக்கை விடுறாங்க பாருங்க அதிலும் தமிழர் பகுதியை விடுத்தா கேட்டிர்கள் ........

    ReplyDelete
  2. Bazeer potti thanthuttaraa?

    ReplyDelete
  3. Enna potti vanthutta? Evvalavu ?

    ReplyDelete

Powered by Blogger.