2 வருடங்களில் நிறைவேற்றாத கோரிக்கைகளை, அரசு 2 வாரங்களில் நிறைவேற்ற துடிக்கிறது - ஹசன் அலி
முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் சமூகும் பற்றிய பல கோரிக்கைகளை தற்போதை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது. அவற்றை நிறைவேற்றுமாறும் அழுத்தம் கொடுத்துவந்தது. இருந்தபோதும் அப்போது அவற்றுக்கு செவிசாய்க்காத அரசாங்கம், தற்போது 2 வாரங்களுக்கிடையழல் முஸ்லிம் காங்கிரஸின் சகல கோரிக்கைகளையும் நிறைவேற்ற துடிப்தாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயம் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
செவ்வாய்கிழமை நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டதில் உயர்பீட உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்தின் நலன், கட்சியின், நாட்டின் நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினர். 60 க்கும் மேற்பட்ட உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் எல்லோருக்கும் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புக்கிட்டாத போதிலும், அநேகரின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன.
இந்நிலையில் எதிர்வரும் 2 அல்லது 3 தினங்களில் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் மீண்டும் கூடி இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும். இதன்போது மைத்திரிக்காh அல்லது மஹிந்தவிற்கா என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்காக முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்பட்டதோ அதேபோன்று எதிர்காலத்திலும் செயற்படும் என்றார்.
neenga Arasa vitu ponalum pohanalum muslimkal nanga mahindaku ethiratan vote panvam!uyarpeeda meeting ka kooti kooti time waste panama kadaya mooditu kilambunga!!!!!!!!!!!
ReplyDeleteவெறும் நாடகம் ! உங்களுடைய பதவிகளால் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை !
ReplyDelete